விருதுநகர் பலாத்கார சம்பவம்.. ஹரிஹரன், ஜுனைத் தவிர வேறு அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு?
விருதுநகர்: விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திமுகவினர் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணுடன் திமுக பிரமுகர் ஹரிஹரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதன் பேரில் இருவரும் அவ்வப்போது போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்கள் கழித்து அந்த பெண்னை பார்க்க வேண்டும் என்பதற்காக ஹரிஹரன் தனக்கு சொந்தமான மெடிக்கல் குடோனுக்கு அழைத்தார். இதை நம்பி சென்றுள்ளார்.

நெருக்கம்
அப்போது அந்த பெண்ணை ஏமாற்றி நெருக்கமாக இருந்ததுடன் அதை அந்த பெண்ணுக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்தார் ஹரிஹரன். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் அந்த பெண் ஹரிஹரனிடம் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார்.

தகராறு
ஆனால் இதற்கு ஹரிஹரன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஹரிஹரன் அந்த பெண்ணின் செல்போனுக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த வீடியோவை டெலிட் செய்து விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஹரிஹரன் வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றால் எனது நண்பர்களுடன் நீ தனிமையில் இருக்க வேண்டும்" என அந்த பெண்ணுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

சமூகவலைதளங்களில் பகிர்வதாக மிரட்டல்
இதற்கு மறுத்த அந்த பெண்ணை சமூகவலைதளங்களில் வீடியோவை பகிர்ந்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை ஹரிஹரனின் நண்பர்கள் முகமது ஜுனைத், பிரவீன், பள்ளி சிறுவர்கள் 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனிடையே இவர்கள் அடிக்கடி அந்த பெண்ணை வரவழைத்ததை தனக்கு தெரிந்த மாடசாமி என்பவரிடம் அந்த பெண் கூறி உதவி கேட்டுள்ளார்.

7 பேர் பலாத்காரம்
கடைசியில் அந்த மாடசாமியும் வீடியோவை பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்து நம்பிக்கை துரோகியானார். இதையடுத்து தனது வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால் தன்னால் வர முடியாது என அந்த பெண் கூறிய நிலையில் இதுதான் கடைசி இதுதான் கடைசி என கூறி கூறி அந்த பெண்ணை அந்த 7 பேரும் பலமுறை வரவழைத்து நாசம் செய்ததாக தெரிகிறது.
Recommended Video

விசாரணை
இதனால்தான் அந்த பெண் போலீஸுக்கு போனார். புகார் அளித்தார். இதையடுத்து 8 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் முகமது ஜுனைத் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவரை போல் வேறு அரசியல் புள்ளிகள் யாருக்காவது தொடர்பிருக்கிறதா, அந்த வீடியோவை வேறு யாருக்கெல்லாம் ஷேர் செய்துள்ளார்கள் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications