ரீல்ஸ் மோகம்.. வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து சிக்கிய சிவகாசி இளைஞர்கள்! அதிரடி காட்டிய போலீஸ்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக இளைஞர்கள் செய்த செயலால் சாலையில் சென்ற ஒரு பயணி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரீல்ஸ் மோகத்தில் வாகன ஓட்டியை விபத்தில் சிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இளைய சமுதாயத்தினர் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எப்போதும் இன்ஸ்டா ரீல்களில் மூழ்கி கிடக்கிறார்கள். அதேபோல், இன்ஸ்டாவில் வீடியோ போடுபவர்களும் அதிக அளவில் லைக்ஸ் பெறுவதற்கும், வியூஸ்களை பெறுவதற்கும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

எத்தனையோ பயனுள்ள வீடியோக்கள் இருந்தாலும், சிலர், வியூஸ்க்காக ஆசைப்பட்டு விபரீத முயற்சிகளிலும் வில்லங்க சேட்டைகளிலும் ஈடுபட்டு பலருக்கும் தொந்தரவு கொடுக்கிறார்கள். அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவகாசி அருகே இளைஞர்கள் இருவர் செய்த செயல், அப்பாவி வாகன ஓட்டி ஒருவரை விபத்தில் சிக்க வைத்தது.
அதாவது சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்று கொண்டு சண்டை போடுவது போல நடித்தனர். ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டும், அடித்துக்கொள்வது போலவும் ஆவேசமாக நின்றனர். இதனை பார்த்த பைக்கில் வந்த ஒரு வாகன ஓட்டி, சாலையை கவனிக்காமல், ஏன் இரண்டு பேரும் சண்டை போடுகிறார்கள் என்ற ரீதியில் பார்த்துக்கொண்டே சென்றார்.
அப்போது அவருக்கு முன்னால் சென்ற பேருந்து ஒன்று பஸ் ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது. சண்டையை கவனித்து வந்த வாகன ஓட்டி முன்னே பஸ் நின்றதை கவனிக்கவில்லை. இதனால் பஸ்சில் மோதி கீழே விழுந்தார். விபத்தில் சிக்கியதை பார்த்த அந்த இரு இளைஞர்களும் சிரித்தவாறு கேலியும், கிண்டலும் செய்தனர்.
அந்தக் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன் மட்டுமன்றி, தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்தனர். இணையத்தில் வைரலாக பரவிய இந்த வீடியோ நெட்டிசன்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இப்படி வீடியோ போடுபவர்கள் மீது தயவுதாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ரீல்ஸ் மோகத்தில் வாகன ஓட்டியை விபத்தில் சிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அருணாசலப் புரத்தை சேர்ந்த காளிராஜன் (வயது 21), வடபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications