விருதுநகரில் கரண்ட் கம்பியை தொட்ட எலக்ட்ரீஷியன்.. ஓடோடி வந்த 7 மாத கர்ப்பிணி.. ஒரே நாளில் 2 சம்பவம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் நடந்த இருவேறு சம்பவங்களின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.. மொத்தம் 5 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன.. இறந்த சடலங்களை கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி, அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. என்ன நடந்தது விருதுநகரில்?
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ்.. இவருக்கு 76 வயதாகிறது.. இவர், தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 9 பேரை அழைத்துக் கொண்டு, ஆன்மீக சுற்றுலா கிளம்பியிருக்கிறார்.

ஆன்மீக பயணம்
அதன்படி, ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு தங்களது காரிலேயே இவர்கள் அனைவரும் சென்றிருக்கிறார்கள்.. குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர்.
குமரியில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, மறுபடியும் சொந்த ஊருக்கு நேற்று காரில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விருதுநகர் - சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், இனாம்ரெட்டியாபட்டி சந்திப்பில் கார் வந்துகொண்டிருந்தபோது, பிரகாஷ் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார், அங்கிருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
வாகன ஓட்டிகள்
அந்த விபத்தில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் (76), அகல்யா ராணி (65), சந்தோஷ் குமார் (51), சுமலதா (40), சுகுணா ( 55) லலிதா (52) ஜெயஸ்ரீ ( 50), 9 வயது சிறுமி என அனைவருமே காயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு அருகிலிருந்த விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அகல்யா ராணி (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்... மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. காரில் சென்றவர்களில் 9 வயது சிறுமி மட்டும் காயங்களின்றி விபத்திலிருந்து உயிர் தப்பியிருக்கிறார்.. இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் - கும்பாபிஷேகம்
அதேபோல், விருதுநகர் காரிசேரி கிராமத்தில் நடந்த சம்பவம் மேலும் துயரத்தை தந்துள்ளது.. அதாவது, விருதுநகர் அருகே உள்ள காரிசேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அந்த கோவிலில் மண்டல பூஜை விழாவுக்காக கிராமத்தில் மைக்செட் மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது..
இதே கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தார்.. இவர்களது வீட்டுக்கு பக்கத்தில்தான், ஒலிபெருக்கி, மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு ஒயரை தூக்கி மேலே திருப்பதி போடும்போது, அதன் ஒரு முனை, அந்த பக்கமாக செல்லும் மின்கம்பியில் உரசி சிக்கியது.. பிறகு திடீரென அந்த ஒயர் வழியாக திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவர் அலறித்துடித்தார்.. அவரது சத்தத்தை கேட்டதுமே அவருடைய மனைவியான 7 மாத கர்ப்பிணி லலிதா, பாட்டி பாக்கியம், சகோதரர் தர்மர், உறவினர் கவின்குமார் என எல்லோருமே பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள்..
கர்ப்பிணி மனைவி
கரண்ட்டில் சிக்கிய திருப்பதியை காப்பாற்ற, அனைவருமே முயற்சித்தனர்.. ஆனால், எல்லார் மீதுமே கரண்ட் பாய்ந்தது.. இதில, திருப்பதி மட்டுமல்லாமல், கர்ப்பிணி லலிதா, பாட்டி பாக்கியம் என 3 பேர் மீதும் தீப்பிடித்து, உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.. படுகாயமடைந்த தர்மர், கவின்குமார் ஆகியோர் உயிருக்கு போராடினார்கள்.. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு காப்பாற்றியதுடன், ஆமத்தூர் போலீசாருக்கும் தகவல் தந்தனர்..
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது 2 பேருமே சீரியஸாக இருக்கிறார்களாம்.. அவர்களுக்கு தீவிர சசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் சடலங்களையும் பார்த்து குடும்பத்தினரும், கிராம மக்களும் கதறியது, காண்போர் நெஞ்சை உலுக்கி எடுத்துவிட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications