விருதுநகரில் பாஸ்போர்ட் கிடைக்கல.. நண்பனால் தவித்த விவசாயி.. அதுக்காக? அதிர்ச்சியில் காரியப்பட்டி
விருதுநகர்: விருதுநகர் கொலையில் ஒரே நாளில் போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்து பிடித்துள்ளார்கள்.. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட முன்விரோதம் இன்று கொலை வரை சென்றுள்ள சம்பவம் காரியாப்பட்டி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் போலீசாரின் விசாரணையும் நடக்கிறது.. என்ன நடந்தது விருதுநகரில்?
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது உவர்குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் செந்தாமரை கண்ணன்.. 34 வயதாகிறது.. இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இதே கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன்.. இவருக்கு 21 வயதாகிறது.. ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம்வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது..
தீரா பகை - முன்விரோதம்
இதனால் நட்பு முறிந்த நிலையில், அது தீராத பகையாக எழுந்தது.. இவர்களின் தகராறு ஏற்கனவே நரிக்குடி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று, வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இருவருக்கும் தீரா பகைமை ஏற்பட்டாலும் அடிக்கடி உறவாடிக் கொள்ளவும் செய்வார்கள்.. பிறகு திடீரென நண்பர்களுக்குள் தகராறு வெடிக்கும்.. மறுபடியும் ஊர்க்காரர்கள் சேர்ந்து இவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 9.30க்கு இருவரும் அங்குள்ள கண்மாய் கரையில் உட்கார்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.
நரிக்குடி போலீசார்
அப்போது வழக்கம்போல் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. இதனால் செந்தாமரை கண்ணனை, ஆத்திரமடைந்த கருணாகரன் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.. இதுசம்பந்தமான வழக்கு பதிவு செய்த நரிக்குடி போலீசார், செந்தாமரைக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு தப்பிச்சென்ற கருணாகரனை பிடிக்க வலைவீசிய நிலையில், நேற்றைய தினமே அவரை சுற்றிவளைத்து கைது செய்துவிட்டனர். விசாரணையையும் அவரிடம் ஆரம்பித்தனர்.
வழக்கமான முன்விரோதத்தினால்தான், இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்ட நிலையில், அவர்களுக்கே அதிர்ச்சி காரணம் காத்திருந்தது.
விருதுநகர் பாஸ்போர்ட்
அதாவது, கருணாகரன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாராம்.. இதற்காக பாஸ்போர்ட்க்கும் விண்ணப்பித்திருக்கிறார்.
போலீஸ் கேஸ் தன் மீது இருப்பதால் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், செந்தாமரைகண்ணன் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க கோரி கருணாகரன் வலியுறுத்தியிருக்கிறார்.. இதற்காக செந்தாமரைக் கண்ணனுக்கு பணமும் தந்ததாக தெரிகிறது. ஆனால் வழக்கை வாபஸ் வாங்காமல் செந்தாமரை கண்ணன் இழுத்தடித்து வந்தாராம்.
உச்சக்கட்ட போதை
கேஸை வாபஸ் வாங்க முடியாமல், கருணாகரனுக்கு பாஸ்போர்ட்டை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. இதனால் செந்தாமரை கண்ணன் மீது மேலும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.. நேற்று முன்தினம் இரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்தும்போது, இதுகுறித்த வாக்குவாதம் நண்பர்களுக்குள் வெடித்துள்ளது.
இருவருமே உச்சக்கட்ட போதையில் இருந்ததால், வாக்குவாதம் கைகலப்பாக மாறிவிட்டது.. அப்போது கருணாகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தாமரைக் கண்ணனை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடியிருக்கிறார்..
கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஊருக்குள் ஓடிவந்திருக்கிறார் செந்தாமரை கண்ணன்.. ஆனால், இரவுநேரத்தில் அதற்கு மேல் ஓடமுடியாமல், சாலையிலேயே நிலைகுலைந்து கீழே விழுந்து இறந்துவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.. முன்விரோதம் கொலை வரை சென்றுள்ள சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications