விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து..2 பேர் படுகாயம்..மருத்துவமனையில் சிகிச்சை
விருதுநகர் அருகே பட்டம்புத்தூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர்: பட்டம்புத்தூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். திரிகள் தயாரிக்கும் இடத்தில் உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டு ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளில் வேலை செய்து வருகின்றனர். வெயில் காலத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றனர்.

கடந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையை அடுத்த கனஞ்சாம்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆலையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இன்றும் இந்த பட்டாசு ஆலையில வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது,ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர்.
பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம்
பட்டம்புத்தூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். திரிகள் தயாரிக்கும் இடத்தில் உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டு ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி, கருப்பையா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications