விருதுநகரில் கற்பகத்துக்கு கள்ளக்காதல்.. சிவகாசி பட்டாசி ஆலையில் சிக்கிய கருப்பசாமி.. கொடுமை பாருங்க

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், வேறு பல பகீர் தகவல்கள் வெளியே தெரியவந்துள்ளது.. இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்த சிவகாசி போலீசார் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது விருதுநகர் மாவட்டத்தில்?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி... இவரது மனைவி பெயர் கற்பகம்.. 4 வயது, 2 வயதில் 2 மகள்கள் இருக்கிறார்கள்.. கருப்பசாமி அங்குள்ள பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.. கற்பகம் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

Virudhunagar Sivakasi Karpagam

இந்நிலையில், கற்பகத்திற்கும், மாரிமுத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இதுவே களளக்காதலாக மாறியிருக்கிறது.. கடந்த 2 வருடமாகவே இவர்களுக்குள் கள்ள உறவு இருந்துள்ளது.. இந்த விவகாரம் கருப்பசாமிக்கு தெரியவந்து அதிர்ச்சியும், ஆத்திரம் அடைந்துள்ளார். பிறகு கற்பகத்தையும், மாரிமுத்துவையும் கண்டித்துள்ளார்.

வாய்த்தகராறு வெடித்தது

4 நாளைக்கு முன்புகூட, மாரிமுத்துவுக்கு போனை போட்டு, கண்டித்திருக்கிறார் கருப்பசாமி.. அப்போது இருவருக்குக்குள்ளும் இடையே வாய்த்தகராறு வெடித்துள்ளது. இதுதொடர்பாக பிறகு பேசிக்கொள்ளலாம் என்று மாரிமுத்து சொல்லவும், கருப்பசாமியும் போனை வைத்துவிட்டார்.. பிறகு, 9ம் தேதி கருப்பசாமிக்கு மீண்டும் போன் செய்த மாரிமுத்து, நேரில் பேசலாம் என்று சிவகாமிபுரம் காலனியிலிருந்து முருகன் காலனி செல்லும் வழியிலுள்ள தனியார் பட்டாசு ஆலைக்கு வர சொல்லி உள்ளார்..

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரசொல்லவும், கருப்பசாமியும், அந்த பட்டாசு ஆலைக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கே மாரிமுத்து, அவரது சகோதரர் குமார், பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் கணேசன், ஜோசப் ஆகிய 4 பேரும் இருப்பதை பார்த்து கருப்பசாமி அதிர்ச்சி அடைந்தார்.. அதற்குள் 4 பேரும் சேர்ந்து, கருப்பசாமியை சுற்றி வளைத்து கொண்டு, அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு, தப்பியோடிவிட்டனர்.

வீட்டில் பதுங்கி கிடந்த 4 பேர்

இதையடுத்து விரைந்து வந்த போலீசார், கருப்பசாமியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பிவைத்துவிட்டு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.. மேலும் 2 தனிப்படை அமைத்து தப்பியோடிய கொலையாளிகளையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், பாறைப்பட்டி பகுதியிலுள்ள வீட்டில் 4 பேருமே பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.. அங்கு விரைந்து சென்ற போலீசார், கருப்பசாமியை கொலை செய்த மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்... கருப்பசாமி தன்னை மாரிமுத்துவை ஆபாசமாக பேசியதால், ஆத்திரத்தில் கருப்பசாமியை திட்டமிட்டு வரவழைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் தந்தார்.

பல்வேறு பகீர் தகவல்கள்

மேலும், கொலை தொடர்பாக போலீசார், மாரிமுத்துவிடம் விசாரணையை நடத்தியபோதுதான், வேறு பல பகீர் தகவல்கள் வெளியாகின.. பட்டாசு ஆலையில் பணிபுரியும் சக பெண் தொழிலாளர்கள் பலரையும் மாரிமுத்து ஏமாற்றியிருக்கிறாராம்.. காதலிப்பதாக சொல்லி, அவர்களிடம் நெருங்கி பழகி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோல, பட்டாசு ஆலை ஒப்பந்ததாரரான கணேசனிடம் விசாரணை மேற்கொண்டால், அவர் மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. இப்போது 4 பேருமே கைதாகி ஜெயிலில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+