17 வயது சிறுவனுடன் புதுவை லாட்ஜில் ரூம் போட்ட 40 வயது ஆசிரியை! விசாரணையில் பகீர்! அதிர்ந்த போலீஸ்!
விருதுநகர்: 17 வயது மாணவனை 40 வயதை சேர்ந்த தனியார் பள்ளியின் ஆசிரியை காதலித்த விவகாரத்தில் அவர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியையே இப்படி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். மந்திரஓடை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துள்ளார். கடந்த 15ஆம் தேதி முதல் தங்கள் மகனை காணவில்லை என்பதால் பெற்றோர் தவித்தனர்.

அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனுடைய பெற்றோர் ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து கடந்த 15 ஆம் தேதி கிளம்பிய மாணவர், கல்லூரியில் சேர உள்ளதாக கூறி கடிதம் எழுதி வைத்திருந்தார். கல்லூரியில் சேருவதற்கு எதற்காக கடிதம் எழுதி வைத்தார் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் மாணவன் படித்த தனியார் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் அந்த மாணவருக்கும் 40 வயது கணினி ஆசிரியை பாத்திமா கனிக்கும் இடையே காதல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளி நிர்வாகம் பாத்திமா கனியை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளனர்.
இதையடுத்து நிறைய விவகாரங்களில் ஆசிரியை மாணவனை அழைத்துக் கொண்டு சென்ற வழக்குகள் ஏராளம் என்பதால் போலீஸார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியை, புதுவையில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புதுவைக்கு விரைந்த போலீஸார் அந்த லாட்ஜில் இருந்து மாணவனை மீட்டு, ஆசிரியை பாத்திமாவை கைது செய்தனர். இதுகுறித்து பாத்திமா கனியிடம் விசாரணை நடத்திய போது மாணவனை பாண்டிச்சேரியில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காகவே அவரை புதுவைக்கு அழைத்து சென்றதாக அந்த ஆசிரியை தெரிவித்தார்.
எனினும் பெற்றோர் இருக்கும் போது உங்களுக்கு ஏன் அது குறித்து அக்கறை? அப்படியே ஆசிரியை என்ற முறையில் இருந்தாலும் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அழைத்து வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லூரி விவகாரங்களை பெற்றோருக்கு தெரிவித்து வழிகாட்டியிருக்க வேண்டும் என கூறிய போலீஸார் ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். ஆசிரியை பாத்திமா கனிக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
வேலியே பயிரை மேயலாமா என்ற சொலவடைக்கு ஏற்ப மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் நன்னடத்தையையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு ஆசிரியரே இப்படி செய்தால் என்ன செய்வது? ஆசிரியை என்றில்லை, ஆசிரியர்களும் மாணவிகளிடம் தவறாக நடக்கிறார்கள். அவர்களையும் காதல் வலையில் விழ வைக்கிறார்கள். இது போன்ற ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன.
மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்தையே ஆசிரியர்களுக்கு பிறகுதான் வைத்திருக்கிறார்கள். பெற்றோருக்கு அடுத்தபடியாக பள்ளி, கல்லூரியில்தான் மாணவர்கள் அதிக நேரம் இருக்கிறார்கள். ஆனால் சில ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தங்கள் சொந்த இச்சைக்காக மாணவர்களையும் மாணவிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை! இது போன்ற சுயநலவாதிகளுக்கு சட்டம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
