விருதுநகரில் சிவலிங்கத்தை இறுக்க கட்டிப்பிடித்து கொண்டு.. இரவில் நித்தியானந்தா சிஷ்யைகளால் பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் நிகழ்வு, வீடியோவாக இணையத்தில் கடந்த 2, 3 நாட்களாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது.. நித்தியானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கிய இடத்தில் அப்படி என்னதான் நடந்தது? போலீஸ், கோர்ட் வரை சென்றும், ராஜபாளையம் தியான பீடத்தில் மீண்டும் சலசலப்புக்கு என்ன காரணம்? நித்தியானந்தா சிஷ்யைகளை ஆசிரமத்திலிருந்து வெளியேற்ற என்ன காரணம்?
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் கணேசன். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யானந்தாவின் தீவிர சிஷ்யராக இருந்து வந்தார். அப்போது தனக்கு சொந்தமான கோதை நாச்சியாபுரம் கிராமத்திலுள்ள 4 ஏக்கர் நிலத்தையும், சேத்தூர் மலையடிவார பகுதியிலுள்ள 37.75 ஏக்கர் நிலத்தையும் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கினார்.

பவர் ஏஜென்ட் திருநெல்வேலி சந்திரன்
இதன்பிறகு நித்யானந்தாவின் சில செயல்களால் கணேசன் அதிருப்தியடைந்தார்.. இதனால், தானமாக வழங்கிய நிலங்கள் ஆன்மீக நோக்கங்களுக்கு விரோதமாக மேனேஜிங் டிரஸ்ட்டியான பரமஹம்ச நித்தியானந்தர் செயல்பட்டு வருவதாகவும், நன்கொடையாக தான் வழங்கிய பத்திரப்பதிவை ரத்து செய்து 40 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தருமாறும் கோர்ட்டில் கணேசன் வழக்கு பதிவு செய்தார்.
நிலம் தொடர்பான வழக்குகளில் மருத்துவர் கணேசன் தலையிட விரும்பாத நிலையிலும், தவறானவர்களுக்கு நிலம் சொந்தமாக கூடாது என்பதை கருத்தில் கொண்ட அவர் 40 ஏக்கர் நிலத்தினை மீட்கும் பொருட்டு அந்த நிலத்தின் பவர் ஏஜென்ட்டாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சார்ந்த சந்திரன் என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவர் கணேசன் பவர் ஏஜெண்டாக எழுதித்தந்த சந்திரன் என்பவருக்கும், நித்தியானந்தா தியான பீட சிஷ்யைகளுக்கும் இடையே, இடம் தொடர்பாக அடிக்கடி சலசலப்பும், பிரச்சனைகளும் தொடர்ந்து வந்துள்ளது.
40 ஏக்கர் நிலத்தை மீட்டு தாருங்கள்
இதனிடையே, தியான பீடத்திற்கு தானமாக வழங்கிய 40 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தருமாறு கணேசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்தியானந்தாவின் ஆசிரமம் செயல்படக்கூடாது, சிஷ்யைகள் வெளியேற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
இதையடுத்து 2 ஆசிரமங்களிலும் உள்ள நித்யானந்தாவின் சிஷ்யைகளை வெளியேற்ற தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் கடந்த 19ம் தேதி ஆசிரமத்திற்கு சென்றார்கள்.. ஆசிரமத்தில் தங்கியிருக்கும் பெண்களை வருவாய் துறையினர் வெளியேற்ற சென்றபோது, அவர்கள் அறைகளை உள்பக்கமாக தாழிட்டு கொண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வாக்குவாதம்
அப்போது, சிஷ்யைகள் ஆசிரமத்தை உள்புறமாக பூட்டிக் கொண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என கூறிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
இதற்கு பிறகு, அதிகாரிகள் கொடுத்த கெடு முடிந்ததையடுத்து நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நேற்று முன்தினம் மீண்டும் சென்றார்கள்.. அங்கிருந்த சிஷ்யைகளை வெளியேறுமாறு அறிவுறுத்தினார்கள்.. அப்போது அவர்களும் சச்சரவு ஏதுமின்றி வெளியேறினர். இதையடுத்து அதிகாரிகள் ஆசிரமங்களை பூட்டி சீல் வைத்துவிட்டு சென்றார்கள்.. இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் சேத்தூரில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குலுள்ள ஆசிரமத்திற்கு வந்த சிஷ்யைகள், சீல் வைத்த பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்கள்..
அநீதி நடந்துவிட்டது சிவபெருமானே
அங்கு இருட்டு அறைக்குள்ளேயே உட்கார்ந்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார்கள்.."தானமாக வழங்கியது எங்களது நிலம். அதனை வலுக்கட்டாயமாக அதிகாரிகள் பிடுங்கி வெளியேற்றுகிறார்கள்.. பரமஹம்ச நித்யானந்தருக்கும் எங்களுக்கும் அநீதி நடந்துவிட்டது" என்று சொல்லிக்கொண்டே கதறி அழுது புலம்பிக் கொண்டே பூஜையும் செய்துள்ளனர்.
இந்த வீடியோதான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த சேத்தூர் போலீசார், நள்ளிரவிலேயே உடனே ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு அத்துமீறி உள்ளே நுழைந்த சிஷ்யைகளை வெளியேற்றியிருக்கிறார்கள்..!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications