காமராஜர் பிறந்த விருதுநகரில் நாடாளுமன்ற பலப்பரீட்சையில் "பாஸ்" ஆக போவது யார்? விறுவிறு அலசல்
Recommended Video

சென்னை: விருதுப்பட்டியாக இருந்து பின்னர் விருதுநகராக மாறியது தென் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான விருதுநகர். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர்.
விருதுநகர் லோக்சபா தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் உருவானது. இதில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.
தகவல் இல்லை
இந்த தொகுதியின் எம்பியாக டி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை சேர்ந்த இவர் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் எத்தனையாவது வகுப்பு வரை படித்துள்ளார் என்ற தகவல்கள் இல்லை.

74 சதவீதம்
இவர் நாடாளுமன்றத்தில் 11 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். மொத்தம் 842 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவரது வருகை பதிவேடு நன்றாகத்தான் உள்ளது. அதாவது 74 சதவீதம் ஆகும்.

ஜாம்பவான்கள்
இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,50,495 ஆகும். ஆண் வாக்காளர்கள் 669,589 பேரும் பெண் வாக்காளர்கள் 680,906 பேரும் உள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தோல்வி
இவர் வீழ்த்தியது தமிழகத்தின் அரசியல் ஜாம்பவான்களில் ஒருவரான வைகோ ஆவார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2,61, 143 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

வெற்றி
தமிழகத்தின் சிறந்த கல்வி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில், வரும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. மக்களின் மனநிலைக்கேற்ப அந்த சூழல் வாக்குப் பதிவில் பொத்தானை அழுத்தும் நேரத்தில் மாறக் கூடியது என்பதாலும் தற்போதைய மாறிப் போயுள்ள சூழலாலும் வெற்றி பெறும் கட்சியைக் கணிப்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications