மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்.. மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. அதை சமாதானம் செய்ய வந்த மாமியாரை மருமகன் குத்தி கொலை செய்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மருமகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மோதலில் மனைவி உள்பட 2 பேர் காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாரயணன் இவர் மகள் முனீஸ்வரி (25). இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை (27) என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

குடித்துவிட்டு சண்டை

குடித்துவிட்டு சண்டை

ராம்குமார் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் முனீஸ்வரி ராம்குமாருக்கு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

வக்கீல் நோட்டீஸ்

வக்கீல் நோட்டீஸ்

இந்த நிலையில் முனீஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ராம்குமாருக்கு விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கோபமடைந்த ராம்குமார் நேற்று இரவு சாத்தூர் அண்ணாநகரில் உள்ள அப்பா வீட்டில் இருந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

கொன்ற மருமகன்

கொன்ற மருமகன்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அருகில் இருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள் (55) விலக்கியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ராம்குமார் மாரியம்மாளை குத்தியுள்ளார். இதில் மாரியம்மாள் இரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

மருமகன் கைது

மருமகன் கைது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த முனீஸ்வரி (25) அவரது அம்மா சந்திரா (58) சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளி ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+