விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் அர்ச்சகர்கள் போதையில் ஒரே டான்ஸ்.. பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்
விருதுநகர்: விருதுநகர் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர், வீட்டில் மது அருந்தி விட்டு ஆபாச நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். என்ன நடந்தது ஸ்ரீவில்லிப்புத்தூரில்?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விரைவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டதையடுத்து, கும்பாபிஷேக பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன
இந்நிலையில், இந்த கோயிலில் உதவி அர்ச்சகராக 30 வயதுடைய கோமதிவிநாயகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார்... இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியிருக்கிறார்கள்.. இவர்களில் சில அர்ச்சகர்கள் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக டான்ஸ் ஆடியதாக தெரிகிறது.
நிர்வாகக்குழு
இந்த அர்ச்சகர்கள் டான்ஸ் ஆடியதை, கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் என்பவர் வீடியோ எடுத்துவிட்டார்.. இந்த வீடியோவை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகாரும் கூறியிருந்தார்.
இதனை தவிர, கோயில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடியதாக கூறி, மற்றொரு வீடியோவையும் சபரிநாதன் தன்னுடைய புகாருடன் சேர்த்து அனுப்பிவிட்டார். ஆனால், தங்களை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சபரிநாதன் மீது கோமதிவிநாயகமும் போலீசில் புகார் தந்தார்..
இந்து முன்னணி புகார்
இதற்கு நடுவில், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி சார்பில் கோயில் நிர்வாகிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார்களின் பேரில், கடந்த 15-ம் தேதி அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது..இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களிடம் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
பிறகு விசாரணையின் முடிவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் சொல்லும்போது, "உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.. கோயில் பூஜை விவகாரங்களில் இனி அவர்கள் தலையிட முடியாது.. அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.. அர்ச்சகர் சுந்தர் மீது கும்பாபிஷேகத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது" என்றார்கள்.
மீண்டும் புகார் - வீடியோ
இதனிடையே, உதவி அர்ச்சகர், தன்னை 2 பேர் தாக்கியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் திடீரென புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நகர் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 3 உதவி அர்ச்சகர்கள் போதையில் டான்ஸ் ஆடும் வீடியோ, இணையத்தில் பரவி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications