விருதுநகர் பாலியல் வன்புணர்வு சம்பவம்.. கைதான 4 சிறார்களுக்கு ஜாமீன்! நீதிபதி உத்தரவு
விருதுநகர்: விருதுநகர் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஹரிஹரன் அப்பெண்ணுடன் உறவு கொண்டு, அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

பாலியல் தொந்தரவு
அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிஹரனை கேட்ட போது, அதற்கு ஹரிஹரன் மறுத்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையில் ஹரிஹரன், தன்னிடம் இருந்த வீடியோக்களை காட்டி அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். மேலும், அந்த வீடியோவை ஹரிஹரன் தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

8 பேர் கைது
இதையடுத்து ஹரிஹரனின் நண்பர்களும் அந்த வீடியோவை வைத்து அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மொத்தம் 8 பேரைக் கைது செய்தனர். அதில் ஹரிஹரன் மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறார்கள்
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 4 பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் 9, 11, 12 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் ராமநாதபுரம் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜாமீன்
கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களுக்கும் நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சூழலில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் ஜாமீன் கோரி மதுரை இளஞ்சிறார் நீதி குழுமத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மருது பாண்டியன், 4 சிறுவர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 சிறுவர்களும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications