விஏஓ டூ சர்வேயர்.. பதிவுத்துறை, மின்துறையில் பொதுவெளியில் அசிங்கமாக சிக்கி.. விழிக்கும் விருதுநகர்
விருதுநகர்: பதிவுத்துறை, கூட்டுறவுத்துறையை தொடர்ந்து, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி வருகின்றன.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும்நிலையில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகும் சம்பவம் நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது.
அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை உள்ளது.. இதில், சில பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கைதாகி, மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறார்கள்.

சர்வேயர்: 2 நாட்களுக்கு முன்புகூட, விழுப்புரம் மாவட்டத்தில் 2 சர்வேயர்கள் லஞ்ச புகாரில் சிக்கினார்கள். மேல்மலையனுார் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை அளவீடு செய்ய அணுகியபோது, மேல்மலையனுார் தாலுகா அலுவலக சர்வேயர்கள், இடைத்தரகர் மூலம் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.
இது குறித்து குமாரின் மருமகன் மாணிக்கம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கவும், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், தாலுகா அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மாணிக்கம், சர்வேயர்களிடம் தந்த போது, புரோக்கர் சரத்குமாரிடம் தருமாறு சொன்னார்கள்..

இடைத்தரகர் கைது: அங்கிருந்த சரத்குமாரிடமிருந்த பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், இடைத்தரகர் சரத்குமார், 28, தலைமை சர்வேயர் தங்கராஜ் (37) லைசன்ஸ் சர்வேயர் பாரதி (32) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
4 நாட்களுக்கு முன்புகூட விருதுநகர் விஏஓவுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துள்ளது.. அதாவது ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள டிமானகசேரியில் விஏஓ-வாக பணியாற்றியவர் அம்மையப்பன். இவர் கடந்த 2010ம ஆண்டு, வாரிசு சான்று வழங்குவதற்காக சுப்பையா பாண்டி என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
விருதுநகர் விஏஓ: இதுகுறித்த புகாரின்பேரில், அம்மையப்பனை விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் கைது செய்தனர்.. இது தொடர்பாக வழக்கில் 2019-ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் 3 வருட சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அம்மையப்பன், மதுரை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். இந்த மனுவை தற்போது விசாரித்த நீதிமன்றம், அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது, ஏற்கனவே நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

இதேபோல, கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிக்க, 3 ஆயிரம் கேட்டுள்ளார் வட்ட வழங்கல் அலுவலல்ர சுமதி.. இவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். வரும் 31ம் தேதியுடன் சுமதி பணிநிறைவு பெறவிருந்தாராம்.. ஆனால், அதற்குள் இப்படியொரு புகாரில் சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்..
திருவண்ணமலை: இதே திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்ஊழியர் இன்று சிக்கியிருக்கிறார்.. தெருவிளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு பெறவேண்டி, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிர்வாக பொறியாளருக்கு ராமகிருஷ்ணன் என்பவர் விண்ணப்பித்துள்ளார்.. இதுகுறித்து சேத்துப்பட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர் சிவப்பிரகாசத்திடம் கேட்டதற்கு, 6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இன்று இவரும் கைதாகி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications