விருதுநகரில் நோயாளி கணவரை.. கட்டையாலேயே "காலி" செய்த மனைவிக்கு ஆயுள்: ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. அதன்படி, உடல்நிலை சரியில்லாத கணவரை அடித்தே கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன்.. இவருக்கு 46 வயதாகிறது.. இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. கணவரோடு தனியாக வசித்து வருகிறார்.. இன்னொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.

உடல்நலம் பாதிப்பு: ஆரம்பத்தில் நன்றாக இருந்த சந்தன மாரியப்பனுக்கு திடீரென கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கை, கால்களும் முடங்கிப்போய்விட்டது.. இதனால் அவரால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. தமிழக அரசிடம் இருந்து பணிக்கு செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மட்டுமே பெற்றுவந்தார்.
இப்படியே 13 ஆண்டுகளாகவே உடல் குறைபாட்டால், வேலைக்கு செல்லாததால, அவரது மனைவி பாண்டிசெல்வியே கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
பாண்டிச்செல்வி இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தன மாரியப்பன் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக பாண்டிச் செல்வி தளவாய்புரம் போலீசாரிடம் புகார் அளித்தார்... எப்போதுமே தன்னுடைய உடல்நிலையை நினைத்து நினைத்து கவலைப்பட்டு, அந்த வருத்தத்திலேயே தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அழுதார்..
இதையடுத்து போலீசாரும், சந்தன மாரியப்பன் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. அப்போதுதான், சந்தன மாரியப்பன் கொலை செய்யப்பட்டது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறுதியானது. இதற்கு பிறகுதான் பாண்டிச்செல்வியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் பாண்டிச்செல்வி, கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
ஆத்திரம்: வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், தன்னுடைய நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டு கொண்டேயிந்ததாகவும், அந்த ஆத்திரத்தில்தான், கட்டையால் அடித்தும், அவரது கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக பாண்டிச்செல்வி வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று தீர்ப்பு: அதன்படி, உடல் பாதித்த கணவரை கொலை செய்து விட்டு, தற்கொலை நாடகமாடிய மனைவிக்கு, ஆயுள் சிறை தண்டனை விதித்து ஶ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பாண்டிச் செல்விக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications