விருதுநகரில் அடிக்கடி உறவினர்களை பஞ்சாயத்துக்கு கூப்பிட்ட ராமகலா.. கோபத்தில் கணவன் செய்த காரியம்
விருதுநகர் : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சமையல் மாஸ்டர் பாலாஜி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிச்சுபட்டியில் மனைவியின் சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்தார்.அங்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தட்டிக்கேட்க உறவினர்களை வரவழைத்துள்ளார் அவரது மனைவி ராமகலா.. இதனால் ஆத்திரம் அடைந்த சமையல் மாஸ்டர் பாலாஜி என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 39 வயதாகும் பாலாஜி சமையல் மாஸ்டர் ஆவார். இவருக்கும், சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே உள்ள பிச்சுபட்டி காலனியை சேர்ந்த ராமகலா (29) என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் கோகுல் என்ற மகனும், 5 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

பாலாஜி தனது மனைவியின் சொந்த ஊரான பிச்சுபட்டி காலனியில் தான் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதை தட்டிக்கேட்க ராமகலாவின் உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்படித்தான் சம்பவம் நடந்த அன்று அவர்கள் வீட்டுக்கு வெளியே நின்று உறவினர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறு முற்றிய நிலையில் பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகலாவின் கழுத்தை சீவினார்
அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு ராமகலாவின் தம்பி வீட்டுக்குள் ஓடி வந்துள்ளார். ராமகலா ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். அப்போது பாலாஜி, அவரையும் கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற உறவினர்களும் ஓடிவந்து பார்த்தபோது, ராமகலா உயிரிழந்து கிடந்தார்.
ராமகலாவின் தம்பி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே தப்பி ஓடிய பாலாஜி நேரடியாக எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி அடிக்கடி பஞ்சாயத்துக்காக உறவினர்களை கூட்டி வந்ததால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications