அசையுது ஆணிவேர்.. "இவர்"தான் பிரதமர் வேட்பாளரா? அப்ப மோடி? விருதுநகரில் மையம் கொண்ட புயல்..பலே பாஜக
சென்னை: தமிழக தொகுதிகளில் பாஜகவின் குறி அழுத்தமாக விழுந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.
கடந்த வருடம் ஜுன் மாதம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார்.. அப்போது, "தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும்.. ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும்" என்று அழுத்தமாக வலியுறுத்திவிட்டு சென்றார்.

அதுமட்டுமல்ல, "தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு 2 முறை வந்தது. அதனை கெடுத்தது திமுகதான்.. ஆனால், தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை பாஜக உருவாக்கும்" என்றும் கூறியிருந்தார் அமித்ஷா.
ராஜதந்திரம்: அமித்ஷாவின் இந்த ராஜதந்திர பேச்சுக்கள், முழுக்க முழுக்க தேசிய அரசியலை மையப்படுத்தியும், எதிர்க்கட்சிகளுக்கு கலக்கத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணக்கூடிய வகையிலும் இருந்ததாக அப்போது கருதப்பட்டன. மேலும், இதுகுறித்த பலத்த விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வெடித்தன.
ஆனால், அமித்ஷா சொன்னதுபோல, தமிழகத்துக்கு 2 முறை பிரதமர் வாய்ப்பு வரவில்லை.. மொத்தம் 4 முறை வந்துள்ளது என்பதே உண்மை.. இதில் காமராஜருக்கு மட்டும் 3 முறை, பிரதமர் சான்ஸ் வந்திருக்கிறது.. மூப்பனாருக்கும் பிரதமர் பதவி தேடி வந்தது.. ஆனால், மூத்த தலைவர்கள் காமராஜரும் சரி, மூப்பனாரும் சரி, பிரதமர் பதவியை துளியும் விரும்பவில்லை. காமராஜருக்கு வாய்ப்பு வந்தபோது அதனை தடுப்பதற்கான வலிமை திமுகவிடம் அப்போது இல்லை என்பதே உண்மை..
மூப்பனார்: அதேபோல மூப்பனாருக்கு வாய்ப்பு வந்தபோது, கலைஞர் அதை விரும்பவில்லை என்றும், மூப்பனாரே வேண்டாம் என மறுத்தார் என்றும் இரு வேறு செய்திகளும் உண்டு. அதனால், இந்த விஷயத்தில் திமுக மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வேறு விஷயம்..
இருந்தாலும், அமித்ஷா அன்று சொன்ன வார்த்தைகள் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. எதற்காக அமித்ஷா அப்படி சொல்ல வேண்டும் ? அமித்ஷா சொல்லும் அந்த பிரதமர் வேட்பாளர் யார்? ? அப்படின்னா, இந்த முறை பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையா? என்றெல்லாம் சந்தேகங்கள் வட்டமடித்தன.
அதுமட்டுமல்ல, அமித்ஷாவின் பேச்சுகுறித்து, நாம் சிலரிடம் விசாரித்தோம்.. அப்போது பல தகவல்கள் நமக்கு கிடைத்தன.. அதாவது, தென்சென்னையில் பிரதமர் மோடி அல்லது கவர்னர் தமிழிசை களமிறங்க வைக்க பாஜக பிளான் செய்கிறதாம்..
தென்னிந்தியா: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், தமிழகத்தில் பாஜக சில இடங்களை கைப்பற்ற முடியும் என்றும், போட்டியிடுவதால் தென்னிந்தியாவில் பாஜகவின் பலம் தேர்தலில் அதிகரிக்கும் என்றும் கூட்டிக்கழித்து கணக்குப் போடுகிறார்களாம். அதனால் தென்சென்னையில் மோடியே நேரடியாக களமிறங்குவார் என்கிறார்கள்.
ஒருவேளை மோடி தமிழகத்தில் போட்டியிடாவிட்டால், அமித்ஷாவின் நம்பிக்கைக்குரிய கவர்னர், தமிழிசை போட்டியிட நிறையவே வாய்ப்புள்ளதாம்.. தமிழிசையை களமிறக்குவதன் மூலம் நாடார் சமூக வாக்குகளை பாஜக பக்கம் திருப்ப முடியும் எனவும் கணக்கு போடுகிறார்கள்.
அமித்ஷா: அதுமட்டுமல்ல, தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பாராளுமன்றம் அமைக்கும் வகையில் அமைந்தால், அப்போது பிரதமராக மோடி இருக்க மாட்டார் என்றும், அந்த சமயத்தில் தமிழகத்திலிருந்து தமிழிசை தேர்வு செய்யலாம் என்றும் கால்குலேசன் பலமாக போடப்படுகிறது..
இதையெல்லாம் மனசில் வைத்தே, அமித்ஷா பேசியிருப்பதாகவும், அவர் பேச்சில் இருக்கும் மர்மம் இதுதான்" என்றும் நம்மிடம் அப்போது பகிர்ந்து கொண்டார்கள் விபரமறிந்த வட்டாரம்.
தற்போது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பாஜகவும் மும்முரமாக களமிறங்கி உள்ளது.. இப்போது விஷயம் என்னவென்றால், தமிழிசைக்கு எம்பி சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக, நமக்கு பிரத்யேகமாக தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த ஒரு வருடமாக விரும்பி வருகிறார் கவர்னர் தமிழிசை செளந்திரராஜன். தேர்தலில் ஜெயித்து எம்.பி.யாகி மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்பதே அவரது இலக்காக உள்ளது..
இந்நிலையில், பிப்ரவரி 2வது வாரத்தில் கவர்னர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறாராம் தமிழிசை. இதனை டெல்லி மேலிடத்துக்கு தெரியப்படுத்தியுள்ளாராம். ஆனால், அங்கிருந்து இன்னும் "க்ரீன் சிக்னல்" கிடைக்கவில்லை. எனினும், நிச்சயம் பச்சை சிக்னல் கிடைத்துவிடுமென தமிழிசை நம்பிக்கையுடன் இருக்கிறாராம் தமிழிசை.. வரப்போகும் தேர்தலில் அவர் போட்டியிடுகிற பட்சத்தில் தென்சென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகளை குறி வைத்திருக்கிறாராம். தமிழிசை சவுந்தராஜன்..
யாருக்கு விருதுநகர்: இதே விருதுநகர் தொகுதியைதான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் குறி வைப்பதாக சொல்கிறார்கள்.. காமராஜரின் சொந்த ஊரான விருதுநகர்தான்.
இந்த தொகுதியை கேட்டு பெற, மதிமுக முயற்சி செய்து வரும் அதேவேளையில், இதே தொகுதியை காங்கிரசும் கேட்பதாக தெரிகிறது.. திமுகவும், காங்கிரசுக்கு வழங்குவதாக சொன்ன தொகுதிகளில் இந்த விருதுநகரும் ஒன்று.. அந்தவகையில், விருதுநகர் யாருக்கு போக போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications