குடித்து விட்டு அடித்த கணவர்.. கடுப்பான மனைவி.. கழுத்தை நெரித்துக் கொன்றார்.. விருதுநகரில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: குடித்துவிட்டு அடித்த கணவனை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு சடலத்தை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்தார் மனைவி. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடிகார கணவனுடன் அழுது கொண்டே பல பெண்கள் இன்றைக்கும் குடும்பம் நடத்தி வருகின்றனர். சில பெண்கள் கணவனை விட்டு விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பாண்டீஸ்வரியோ, குடித்து விட்டு தன்னை அடித்து சித்ரவதை செய்த கணவனின் கழுத்தை நெரித்து கொன்று வீட்டிலேயே மறைத்து வைத்து அழுதிருக்கிறார்.

ஆறுமுகமும், பாண்டீஸ்வரியும்

ஆறுமுகமும், பாண்டீஸ்வரியும்

கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் ஆறுமுகம் என்பதாகும். இவருக்கு சொந்தமாக வத்திராயிருப்பில் மூன்று வீடுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டீஸ்வரியை திருமணம் செய்த ஆறுமுகம் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வாராம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போல சண்டை நடக்கவே, அக்கம் பக்கத்தினருக்கும் அந்த சண்டை கேட்டுள்ளது. அதன்பின்னர் சில நாட்களாக ஆறுமுகத்தின் சத்தத்தையே காணவில்லை.

வீட்டில் வந்த துர்நாற்றம்

வீட்டில் வந்த துர்நாற்றம்

பாண்டீஸ்வரி மட்டும் வீட்டிற்குள் சென்று வந்திருக்கிறார். ஆறுமுகத்தின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பாண்டீஸ்வரி வெளியே போன நேரத்தில் அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது அழுகிய நிலையில் ஆறுமுகத்தின் சடலம் கிடந்தது.

போலீஸ் அதிர்ச்சி

போலீஸ் அதிர்ச்சி

அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கவே, போலீசார் பாண்டீஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். பாண்டீஸ்வரி கூறிய பதில்களே அவர்தான் கொலை செய்திருப்பார் என்று காட்டிக்கொடுத்தது. இனியும் மறைக்க முடியாது என்று நினைத்த பாண்டீஸ்வரியே தனது கணவரை கொன்றதை ஒத்துக்கொண்டார்.

குடிக்க வேண்டியது.. அடிக்க வேண்டியது

குடிக்க வேண்டியது.. அடிக்க வேண்டியது

தினசரியும் குடித்து விட்டு வந்து அடித்து தொந்தரவு செய்தார் என்றும் போதையில் மயங்கிய நிலையில் இருந்த போது கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டதாகவும் பின்னர் அழுததாகவும் கூறினார். கொலை செய்து விட்டாலும் பாசத்தில் தினசரியும் அழுதுள்ளார்.

அழுகிய பிணம்.. ஓயாத அழுகை

அழுகிய பிணம்.. ஓயாத அழுகை

சடலத்தை மறைத்து வைத்திருந்தாலும் துர்நாற்றம் காட்டிக்கொடுத்துவிட்டது. பாண்டீஸ்வரியின் வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்பத்தகராறு கொலையில் முடிந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+