24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியா தொடர்ந்து முதலிடம்!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,800,711 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 8,16,534 ஆகும்.
உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரஷ்யா ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டது. ஆனால் அதுகுறித்த விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு அந்நாடு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.38 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.16 லட்சமாகும். கொரோனாவிலிருந்து இதுவரை 1.63 கோடி பேர் மீண்டுள்ளனர். 61,767 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 லட்சமாகும். இதுவரை 1.81 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 40, 552 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் 36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.15 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 21,434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 31 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 58,546 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,696 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா முதலிடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications