‛குற்றமற்றவர்’.. டொனால்ட் ட்ரம்ப் நிரபராதி.. அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. செம ட்விஸ்ட்
வாஷிங்டன்: 2020ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது எழுந்த புகாரில் அந்நாட்டு உயர்நீதிமன்றம் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது. இதன்மூலம் டொனால்ட் ட்ரம்ப் நிம்மதியடைந்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2020ல் அதிபர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அப்போது அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவர் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கினார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஜோபைடன் வெற்றி பெற்று அதிபரானார். இந்த வேளையில் அமெரிக்காவில் பல இடங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே தான் டொனால்ட் ட்ரம்ப் மீது முக்கிய புகார் எழுந்தது. அதாவது தோல்வி நெருங்கியதை தொடர்ந்து 2020ல் அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவர் முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு இடையூறு செய்து, ஜனநாயகத்தை ஏமாற்ற முயன்றதாக புகார் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ட்ரம்ப் மீது வழக்கும்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ட்ரம்ப்புக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரானார். மொத்தம் 27 நிமிடங்கள் வரை விசாரணை நடந்தது. இதையடுத்து அப்போது தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் நிரபராதி என நீதிமன்றம் கூறியது.
மேலும் வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் ட்ரம்ப் நிம்மதியடைந்துள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ட்ரம்ப் போட்டியிட ஆர்வமாக உள்ளார். இத்தகைய சூழலில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப் ‛‛இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த பழிவாங்கல் நடவடிக்கை என்பது அமெரிக்காவில் ஒருபோதும் நடக்கக் கூடாது'' என உற்சாகமாக தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications