ரொம்ப மோசம்.. அமெரிக்க நாடாளுமன்றம் மீது தொடரும் தாக்குதல்.. அடுத்து என்ன? வெளியான முக்கிய தகவல்
வாஷிங்டன்: வெறும் நான்கு மாத இடைவெளியில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வரவே அந்நாட்டு அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது சமீப காலங்களாக நடைபெறும் தாக்குதல்களும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை அதிகப்படுத்தியுள்ளது.

திடீர் தாக்குதல்
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினார். அங்கு திடீரென்று அதி வேகமாக வந்த கார் நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைய முயன்றது. அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மீது அந்த கார் மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார். காரில் இருந்த மர்ம நபர் அங்கிருந்த போலீசாரை கத்தியைக் கொண்டு அச்சுறுத்தினார். இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

முள் வேலிகள்
இது அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி, இதேபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைச் சுற்றி முள் வேலிகள் அமைக்கப்பட்டன. அந்த வேலிகள் நீக்கப்பட்ட சில நாட்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த முள் வேலிகள் அங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்திருந்தால் தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எம்பிகள் கருத்து
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் எம்பி கிறிஸ் வான் ஹோலன் நாடாளுமன்ற கட்டடத்தைச் சுற்றி நிரந்தரமாக முள் வேலி அமைப்பது குறித்த மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தார். இதன் மூலம் எம்பிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பது அவரது வாதம். இருப்பினும், நாடாளுமன்ற கட்டடத்தைச் சுற்றி முள் வேலிகள் இருப்பது சரியானது இல்லை என்றும் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலின்போது கூட அங்குத் தடுப்புகள் இருந்தன என்று குடியரசு கட்சி எம்பிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு நடைமுறை
அமெரிக்க நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை அங்குப் பாதுகாப்பிற்குத் தான் உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ரஸ்ஸல் ஹானோர் தெரிவித்தார். ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்குப் பின், பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிட்டவர் தான் இந்த ரஸ்ஸல் ஹானோர். நாடாளுமன்றம் என்பது மக்களுக்கானது என்பதால் பொதுமக்கள் அணுகக் கூடிய வகையில் நாடாளுமன்றம் இருக்க வேண்டும் என்பது எம்பிகளின் கோரிக்கை என்றும் சரியான பாதுகாப்பு நடைமுறைகளுடன் மக்களும் அணுகும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் பைடன்
நல்ல வேலையாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதலின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு இல்லை. அவர் ஈஸ்டர் விடுமுறைக்காக பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் தற்போது கேம் டேவிட் என்ற இடத்திற்குச் சென்றிருந்தார். இல்லையென்றால் அங்கு மிகப் பெரியளவிற்கு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications