44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்கியே ஆகனும்.. எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
வாஷிங்டன்: 44 பில்லியன் டாலர் மதிப்புக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்க மறுத்துள்ள உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க்கிற்கு எதிராக அந்நிறவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் எலான் மஸ்க். இவர் தான் உலகின் பெரும்பணக்காரராக உள்ளார்.
இந்நிலையில் தான் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார்.

44 பில்லியன் டாலருக்கு வாங்க...
இதையடுத்து அவருக்கு டுவிட்டர் நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்பட்டது. இதில் இடம்பெற மறுத்த எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை தான் வாங்குவதாக பகிரங்கமாக அறிவத்தார். மேலும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு முழு இடமளிக்கும் வகையில் டுவிட்டர் பயன்பாடு இருக்கும் என கூறினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க எலான்மஸ்க் முடிவு செய்தார்.

கிடப்பில் போடப்பபட்ட ஒப்பந்தம்
இதுதொடர்பாக ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டன. இதற்கிடையே தான் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து தகவல் கொடுக்க வேண்டும் என எலான் மஸ்க் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக எலான் மஸ்க் மற்றும் டுவிட்டர் நிறுவனம் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

பங்குகள் விலை சரிவு
இதற்கிடையே தான் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிய துவங்கியது. கடந்த 3 மாதங்களில் இந்நிறுவன பங்கு விலை 37 டாலர் என்ற அளவில் சரிந்தது. இதனால் எலான்மஸ்க் டுவிட்டரின் பங்கு வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக தான் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்கு விலைகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

டுவிட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்க்
இந்நிலையில் தான் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கினார். டுவிட்டரில் உள்ள போலி கணக்கு தொடர்பான விவரங்களை அந்நிறுவனம் வழங்கவில்லை எனக்கூறி ஒப்பந்தத்தை முடிக்காமல் இருந்தார். இதற்கு டுவிட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் எலான் மஸ்க்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்தது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டுவிட்டர்
அதன்படி டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக கூறி ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மஸ்க் மீது டெலாவேர் நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்தப்படி ஒரு டுவிட்டரின் பங்கை 54.20 டாலர் என்ற அளவில் மொத்தமாக 44 பில்லியன் டாலருக்கு வாங்கி கொள்ள அவருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications