அதிர்ந்த அமெரிக்கா.. தேவாலயங்களில் 70 ஆண்டாக பாலியல் பயங்கரம்! நரக வேதனை அனுபவித்த 2000 குழந்தைகள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கதோலிக தேவாலயத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளை பாதிரியார்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிகழ்வு தற்போது அம்பலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்து இருக்கும் புகழ்பெற்ற பழமையான கதோலிக தேவாலயங்களில் குழந்தைகள் பாதியார்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இது தொடர்பாக காவல்துறை அங்கு விசாரணையை தொடங்கியது.

அந்த விசாரணையில் 451 பாதிரியார்கள் 1,997 குழந்தைகளை கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக அரசின் மூத்த வழக்கறிஞர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு விசாரணை தொடங்கிய 103 பேர் மட்டுமே இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தேவாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் தற்போது மனநல அல்லது உடல் நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் 300 பாதிரியார்கள் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் தேவாலயங்களில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில்தான் இல்லினாய்ஸ் மாகாணத்தில் நடந்த இந்த பாலியல் கொடூரங்கள் வெட்டவெளிச்சமாகி இருக்கின்றன.
இது தொடர்பாக இல்லினாய்ஸ் மாகாண அரசு வழக்கறிஞர் வாமே ரவோல் 700 பக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் டஜன் கணக்கான பாலியல் பலாத்கார குற்றங்களும், பாலியல் துன்புறுத்தல் குற்றங்களும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக பாதியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் எவ்வாறு புறம்தள்ளப்பட்டன? குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார்கள் எப்படி வேறு தேவாலயங்களுக்கு மாற்றப்பட்டார்கள் என்ற விபரமும் அதில் உள்ளது.
இதுகுறித்து சிகாகோ தலைமை பாதிரியார் தெரிவிக்கையில், கதோலிக தேவாலயங்களை மட்டும் குறி வைத்து இருப்பது நல்லதல்ல. என்று கூறி உள்ளார். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்பதாகவும், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்று கார்டினல் பிளேஸ் ஜே குபிச் உறுதியளித்து இருக்கிறார்.

இந்த அறிக்கையில் குற்றச்செயலில் ஈடுபட்ட பாதிரியார்களின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அதில் சிகாகோவை சேர்ந்த டேனியல் மெக்கோர்மாக் என்ற பாதிரியாரே இல்லினாய்சில் மிக மோசமாக குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த 1980 களில் பயிற்சியில் இருந்த டேனியல் மீது பாலியல் புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுத்த தேவாலயம் கடைசி வரை மதகுருவாக விடாமல் செய்தது.
அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவர் 2 முறை கைது செய்யப்பட்டார். 5 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கைதான அவருக்கு 2007 ஆம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் உள்ளன.
அதில் ஒருவர் பேசும்போது, "அவர்களுக்கு எல்லாவற்றையும் சரியாக மாற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர்கள் செய்தது அனைத்துமே தவறுதான்." என்றார். இவர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஸ்னாப் என்ற அமைப்பு தெரிவிக்கையில், தேவாலயங்களின் சட்டங்கள் பலவீனமான, தெளிவற்ற, மற்றும் அரிதாக பின்பற்றப்படுபவை என்று குறிப்பிட்டு உள்ளது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்!












Click it and Unblock the Notifications