இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்.. இந்திய தொழில் துறைக்கு வரப்போகும் பெரும் ஆபத்து
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை கண்டிக்கும் விதமாக இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா ஏற்கனவே 25 சதவீதம் உயர்த்தியிருந்தது. வரி படிப்படியாக மேலும் உயர்த்தப்படும் என்று கூறிய நிலையில், மேலும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த 50 சதவீத வரி விதிப்பானது இன்று முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது இனிமேல் 50 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி வரி விதிப்பால் இந்திய தொழில் துறையில் கடும் தாக்கம் ஏற்படவுள்ளது. குறிப்பாக இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனையை சமாளிப்பதற்காக ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனையில் தீவிரமாக இறங்கியது. இதனை இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் கொள்முதல் செய்தனர். இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
50 சதவீத வரி உயர்வு
ரஷ்யா அந்தப் பணத்தை மீண்டும் போருக்கு பயன்படுத்துவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் விமர்சனம் செய்தார். இந்தியா, சீனா பொருட்களுக்கான அமெரிக்க வரியையும் அவர் உயர்த்தினார். அதிகபட்சமாக இந்தியா மீதான வரியை அவர் 50 சதவீதம் உயர்த்தியுள்ளார். இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் தேவை ரஷியாவிடமிருந்த 40 சதவீதத்துக்கும் மேல் பெறப்பட்ட வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு இடியை இறக்கியது. இந்த வரி விதிப்பிற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம், எதிர்ப்பைத் தெரிவித்தன. இதனால், இந்தியா - அமெரிக்கா நெருங்கிய உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி
அமெரிக்காவின் அலாஸ்காவில் கடந்த 15 ஆம் தேதி ரஷ்ய அதிபருடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பு குறித்து 2 அல்லது 3 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தை கைகொடுக்கப்படாத நிலையில் இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் பொருட்கள், கிடங்குகளில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதாவது இன்று அதிகாலை 12.01 மணி முதல் அமலாகிறது.
வரி உயர்வு இன்று முதல் அமல்
இந்த உத்தரவு அமலாவதற்கு முன்பே விற்பனைக்கு அனுப்பப்பட்ட, அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்ட இந்திய பொருள்களுக்கு இந்த கூடுதல் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து தீவிரமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, அமெரிக்கா வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீதான வரிச் சலுகையை தொடர்ந்து கோரி வந்தது.
வேளாண், பால் பொருள்களுக்கு வரிச் சலுகை அளிக்க முடியாததற்கான காரணம் மற்றும் கடினமான சூழல் குறித்தும், மற்ற எந்த நாட்டுக்கும் சலுகை அளிக்கப்படாததும் இந்தியா சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் நீடித்த இழுபறி காரணமாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது.
குற்றச்சாட்டு
அதைத்தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து பிற நாடுகளுக்கு இந்தியா கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபமடைவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதல் 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய பொருள்கள் மீதான இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இந்த புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது.
தொழில் துறையில் தாக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி வரி விதிப்பால் இந்திய தொழில் துறையில் கடும் தாக்கம் ஏற்படவுள்ளது. குறிப்பாக இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. இந்த கூடுதல் வரியில் இருந்து, மருந்து, எலக்ட்ரானிக் பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications