குலுங்கிய வனுவாட்டு தீவுகள்.. 7.2 அளவில் நிலநடுக்கம்! சுனாமி வார்னிங் விடுப்பு.. மக்கள் அச்சம்
வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடலின் வனுவாட்டு தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து வனுவாட்டு தீவு பகுதி மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடு தான் வனுவாட்டு நாடு. சுற்றிலும் எரிமலைகளைக் கொண்டுள்ள இந்த தீவுக்கூட்டம், ஆஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ தூரம் கிழக்கேவும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று வனுவாட்டு தீவுக்கு அருகே 54 கிமீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. எனினும் சேத விவரங்கள் உடனே வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையே சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வனுவாட்டு தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நியூசிலாந்து நாட்டின் ஒரு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சுனாமி எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய வனுவாட்டு தீவுகளில் 3,30,000 மக்கள் வசித்து வருகிறார்கள். நிலநடுக்கத்தால் அங்குள்ள சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வனுவாட்டு அரசின் இணையதளமும் நிலநடுக்கத்திற்கு பிறகு செயல்பாடு இன்றி ஆஃப்லைனில் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications