"நெஞ்சே பதறுதே.." மதுவை கொடுத்து 8ஆம் வகுப்பு மாணவருடன் உடலுறவு! 22 வயது பெண் ஆசிரியர் பகீர் சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் மாணவரிடம் அத்துமீறிய பெண் ஆசிரியை ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாகத் தாய், தந்தைக்குப் பிறகு குருவைத் தான் சொல்வார்கள். எந்தவொரு மாணவரையும் நல்வழிப்படுத்தித் திருத்துவது என்றால் அது ஆசிரியர்கள் தான். ஒவ்வொரு இளைய சமூகத்தினரின் எதிர்காலமும் ஆசிரியர்களையே நம்பி இருக்கிறது.

இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தவறான திசையில் செல்லும் மாணவர்களைக் கூட திருத்தி நல்வழிப்படுத்தி, பெரிய சாதனையாளர்களாக மாற்றிய பல சம்பவங்களை நம்மால் உதாரணமாகச் சொல்ல முடியும்.
ஆசிரியர்கள்: ஆனால், அனைத்து ஆசிரியர்களும் இப்படி இருக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. மாணவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிய சில மோசமான ஆசிரியர்களும் இங்கே இருக்கவே செய்கிறார்கள். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் அமெரிக்காவில் அரங்கேறி இருக்கிறது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2015இல் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. 31 வயதான மெலிசா மேரி கர்டிஸ் மாண்ட்கோமெரி என்ற நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
8ஆம் வகுப்பு மாணவர்: இந்தச் சம்பவம் நடந்த போது அந்த ஆசிரியருக்கு 22 வயது ஆகி இருந்தது. மறுபுறம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு வெறும் 14 வயது மட்டுமே ஆகியிருந்தது. அப்போது அந்த மாணவர் 8ஆம் வகுப்பு படித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட அந்த நபர் புகார் அளித்த நிலையில், கடந்த மாதம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தார்.
இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், "அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். கடந்த 2015ஆம் அந்த நபர் சிறுவனாக இருந்த போது இந்த பாலியல் அத்துமீறல் தொடங்கியுள்ளது. அந்த சிறுவனிடம் இவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்றனர்.
பாலியல் உறவு: கடந்த 2015ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் மே மாதம் வரை இந்தச் சம்பவம் நடந்துள்ளன. அந்த பெண் தனது கார் தொடங்கிப் பல இடங்களில் வைத்து மாணவரிடம் அத்துமீறி இருக்கிறார். அப்போது எட்டாம் வகுப்பில் படித்த அந்த மாணவருக்கு மது மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்துள்ளார். இதைக் கொடுத்து மயங்கிய பெண் ஆசிரியர் அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். 20 முறைக்கு மேல் இந்த அத்துமீறல் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அந்த பெண்ணுக்கு எதிராகக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் மீது பாலியல் அத்துமீறல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தானாக வந்து சரணடைந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே இதுபோல நடந்தால் மாணவர்களின் நிலை என்னவாகும் என்றும் நெட்டிசன்கள் பலரும் கவலையடைந்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications