Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் நடந்த உலக அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாய் - மகள் சாதனை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த உலக அழகி போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் ஒன்றாக அழகி போட்டியில் பங்கேற்றதோடு, மிஸ் மற்றும் மிஸஸ் அழகி போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தி உள்ளார்கள்.

திருமதி உலக அழகி போட்டி 1984-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்படித்தான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ராயல் க்ரூஸ் என்ற கப்பலில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. பிட்னஸ், கேள்வி பதில் சுற்று என ஒன்பது நாட்கள் போட்டி நடந்துள்ளது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளார்கள்.

Chennai America

சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு பீப்பிள் பட்டங்களை வென்றுள்ளாரக்ள். அதேபோல் அவரது மகள் சரிஹா சௌவுத்ரி "மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024" என்ற பட்டத்தை வென்றிருக்கிறார் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்ட நிலையில் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் போட்டியிட்டவர், இந்தியாவிற்கு பெருமைத் தேடித்தந்துள்ளார்.

தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் சரிஹா, தனது தாய் திருமதி உலக அழகி போட்டிகளில் பங்கேற்பதை பார்த்தே தானும் அழகி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில். "நான் பங்கேற்ற முதல் அழகி போட்டியிலேயே பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு எனக்கு முழு ஊக்கமாக இருந்தது என்னுடைய அம்மா தான்.

அவர் 2021ம் ஆண்டு முதல் முறையாக அழகி போட்டியில் பங்கேற்றார். அவர் தான் எனக்கு ரோல் மாடல். குறிப்பாக கொரோனாவின் போது மரணம் வரை சென்று என்னுடைய அம்மா மீண்டார். பின்னர நடனம், உடற்பயிற்சி, நீச்சல், யோகா என திருமதி அழகி போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்தி பட்டத்தை வென்றுள்ளார். அதுவே நானும் அழகி போட்டியில் பங்கேற்று, அம்மாவைப் போல உறுதியுடன் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது" என்கிறார்.

அதேபோல் 2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்று "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றுள்ளாராம். தற்போது அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் Ms Spirit of world univers and Ms international world People Choice பட்டங்களை தாய் மகள் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இது பற்றி பிளாரன்ஸ் கூறும் போது, "பெண்கள் எப்போதும் சாதிக்கப் பிறந்தவர்கள். உங்களை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்துக்கொள்ளாதீர்கள், தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள். ஒருநாள் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+