'உன் அருமை தெரியும் போது பக்கம் நீ இல்லை'.. அமெரிக்காவில் குடிபெயர்ந்து வாழ்பவரின் மனக்குமுறல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடிபெயர்ந்து பல வருடங்களுக்கு மேல் வாழ்பவர் ஒருவரின் மனக்குமுறல் தொடர்பாக ஆதவன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த குமுறல் அயோத்தி படத்தில் வரும் பாடலின் ஒரு வரி அப்படியே பொருந்தும்.. பக்கத்துல வாழும் போது உன் அருமை தெரியலை.. உன் அருமை தெரியும் போது பக்கம் நீ இல்லை.. என்பது அப்படியே உணர்த்துகிறது. அந்த என்ஆர்ஐயின் பதிவை பாருங்கள்.

"காற்றோடு பட்டம் போல
இந்தக் காற்றோடு பட்டம் போல
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்லக் கூடும்?
அது போகும் போக்கதான்
கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா?
எங்கோப் போனது
என்னிடம் வந்து சேருமா?
பக்கத்துல வாழும் போது
உன் அருமை தெரியலை
உன் அரும தெரியும் போது
பக்கம் நீயில்ல
தன்னந்தனி படகு போல
தத்தளிக்கும் வாழ்க்க போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுள்ள" இந்த வரிகளை அப்படியே உரித்து வைத்தது போல் அமெரிக்காவில் குடிபெயர்ந்து பல வருடங்களுக்கு மேல் வாழ்பவர் ஒருவரின் மனக்குமுறல் வெளிப்படுகிறது. அவரின் பதிவினை அப்படியே பார்ப்போம்.
"நாங்கள் அமெரிக்காவிற்கு பணத்திற்காகவும் மற்றும் நல்ல எதிர்காலத்திற்காகவும் வருகிறோம். எங்களின் இந்த போராட்டம் அமெரிக்காவிற்கு வந்த உடன் நிறைவேறாது. குறைந்தது 4-5 ஆண்டுகள் ஆகும். இந்த காலக்கட்டத்திற்கு நாங்கள் டிகிரி வாங்குவது, எங்களுக்கு ஏதுவான வாழ்க்கையை தேடுவது, நிலையான வேலையை தேடுவது உள்ளிட்டவற்றிக்கே நான்கு அல்லது ஐந்து வருடம் ஆகிவிடும்.
அதன்பிறகு அமெரிக்காவில் ஒரு நல்ல வாழ்க்கைக்ககான அடித்தளம் போட வேண்டியதிருக்கும். உதாரணமாக ஹெச்ஒன் விசா, கிரீன்கார்டு பேக்லாக் போன்ற வசதிகளுடன், அங்கு நிரந்தமாக வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிக்கவும், அதை பாதுகாக்கவும் போராடுவோம்.
அதன்பிறகு நாங்கள் திருமணம் செய்து கொள்வோம். குழந்தையும் பெற்றுக்கொள்வோம். அடுத்த 10 அல்லது 20 வருடங்கள் சரசாரி வாழ்க்கையை அடைவதற்கான எல்லா தேடுதல்களும் இருக்கும். கிரீன் கார்டு பெற போராடுவது, வீடு வாங்குவது, நல்ல நண்பர்கள் வட்டத்தை அமெரிக்காவில் உருவாக்குவது போன்றவற்றில் கவனம் இருக்கும்.
இதற்கிடையில், இந்தியாவில் வசிக்ககும் எங்களுடைய பெற்றோருக்கு வயதாகிக் கொண்டே செல்லும். உறவினர்களுக்கு நடைபெறும் திருமணம் வந்து செல்ல வசதி இல்லாத நேரத்தில் நடைபெறும். "ஏய், உன் திருமணம் மார்ச் மாதமா? என் குழந்தைகள் பள்ளியில் இருப்பார்கள், என்னால் முடியாது." என்று மறுக்க வேண்டியதிருக்கும். எச்1பி பிரச்சனைகள் மற்றும் பயணம் செய்ய முடியாத சில சிக்கல்கள் காரணமாக தாத்தா பாட்டி இறந்துவிடுவார்கள். எங்கள் நிறுவனங்கள் வேலையாட்களை ஆவேசமாக பணிநீக்கம் செய்யும் காலத்தில் தான் அப்பாவிற்கு மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்போது போக முடியாத நிலை ஏற்படும்.
இப்படியான சூழலில் வாழ்க்கையில் பல விஷயங்களை நாங்கள் இழக்கிறோம். இந்தியாவில் உள்ள உறவினர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் வாழ்க்கை எப்போதும் போல் செல்கிறது. எங்கள் வீட்டில் வளரும் சகோதர சகோதரிகளின் குழந்தைகளான மருமகன்களும் மருமகளும் எங்களை பற்றி நன்கு அறியாமல் வளர்கிறார்கள். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை "போன் கொண்டு வரும் மாமா மற்றும் அத்தை" என்று அவர்கள் எங்களை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா வந்த காரணத்தால் எங்களுக்கு அமைந்த அர்த்தமுள்ள குடும்ப வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு இல்லை. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை அல்லது உறவினர்கள் அவர்களுக்கு இல்லை. பெற்றோர்களாகிய நாங்களே அவர்களின் முழு உலகமாக மாறுகிறோம். உங்கள் மனைவி தான் பெரும்பாலும் வெளிநாட்டில் உங்கள் ஒரே நண்பராகி விடுவார். அவளும் உன்னைப் போலவே குழப்பத்தில் இருப்பாள். நீங்கள் அவளிடம் இரண்டு நாட்கள் சண்டை போட்டு வாக்குவாதம் செய்யும் போது அவள் யாரிடம் பேசலாம் என்று யோசிப்பாள்? ஆனால் பகிர்ந்து கொள்ள யாருமே இருக்க மாட்டார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மை.
நீங்கள் உருவாக்கிய நண்பர்கள் நெட்வொர்க் விரைவில் பொறாமைகளாலும் புகார்களால் சூழப்படும். விரைவிலேயே அவர்கள் ஒன்றும் அப்பாவிகள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எப்படிப்பட்ட பொறமைகள் வரும் என்றால், முதலில் கிரீன் கார்டு யாருக்கு கிடைத்தது, பெரிய வீடு வாங்கியவர், டெஸ்லா கார் வைத்திருப்பவர், மேனேஜர் ஆனவர் யார், ஃபர்னிஷ் செய்யப்பட்ட பேஸ்மென்ட் யார் வைத்துள்ளார்கள் என பல வகையில் பொறாமையும், பிரிவுகள் வந்துவிடும். இதனால் இதிலேயே பல கேள்விகளில் நீங்கள் சிக்கி கொள்வீர்கள்
இதனிடையே குழந்தைகள் வளர்ந்த பின்னர் நீங்கள் சற்றும் எதிர்பார்க்காதது நடைபெறும்.. உங்கள் குழந்தைகளுக்கு 16 வயது ஆகும் போது, உங்கள் மகன் அல்லது மகள், காதலன் அல்லது காதலியை வீட்டிறகு அழைத்து வருவார்கள்.. இந்த கலாச்சாரத்தை ஒன்று நீங்கள் ஏற்பீர்கள் அல்லது உங்கள் ஊர் கலாச்சாரபடி வாழ வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.
ஒரு கட்டத்தில் தென்னிந்திய (தெலுங்கு/கன்னடம்/தமிழ்) சமூகம், இந்திய சங்கங்கள், கோவில்கள், தன்னார்வ தொண்டு போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உங்கள் சூழ்நிலையின் அடிப்படையில் உங்கள் அரசியல் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். ஒன்று நீங்கள் தாராளவாதியாகி, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்து வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். அல்லது நான் இதையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நினைத்து பழமைவாதியாக மாறுவீர்கள்..
நீங்கள் இந்தியாவுக்குச் சென்று பார்க்கும் போது, அங்கு உள்ளது போல் நாம் சுத்தமாக இல்லையே என்று கண்டுபிடிப்பீர்கள். உங்கள் உறவினர்கள் அனைவரும் மாறியிருப்பார்கள். நீங்களும் முழுமையாக மாறியிருப்பீர்கள். மாமாக்கள், அத்தைகள் இறந்திருப்பார்கள். மருமகன்கள் மற்றும் மருமகள்கள் அடையாளம் தெரியாதவர்களாகி இருப்பீர்கள். நீங்கள் வளர்ந்த தெருக்கள் மற்றும் நகரம் அடையாளம் காண முடியாத அளவிற்கு அடியோடு மாறி இருக்கும். .
அப்போது தான் நீங்கள், நான் அமெரிக்காவில் நன்றாக இருக்கிறேனா அல்லது நான் சொந்த ஊரில் இருந்திருக்க வேண்டுமா?" என்ற கேள்வி கேட்பீர்கள். அதற்கு பதிலை அறிய முடியாமல், மீண்டும் வேலைக்கு போவீர்கள். வழக்கம் போல் உங்களுக்குத் தெரிந்த உலகத்திற்கு நீங்கள் திரும்பி வந்து விடுவீர்கள்.ஆனால் அமெரிக்காவில் நன்றாக இருக்கிறேனா அல்லது நான் சொந்த ஊரில் இருந்திருக்க வேண்டுமா இந்தக் கேள்விக்கான பதில் தெரியாமல் போயிருக்கும்" இவ்வாறு அமெரிக்காவில் வாழ்வாதாரத்திற்காக குடியேறிவர் என்ஆர்ஐ குரூப் ஒன்றில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications