'எங்கே போனாலும்.. நாங்களும் வருவோம்'.. பிரான்சில் டிரெக்கிங் சென்ற பெண்ணை பின் தொடர்ந்த ஆடுகள்!
வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் டிரெக்கிங் சென்ற பெண் ஒருவரை, ''நீங்க எங்கே சென்றாலும்.. நாங்களும் பின் தொடர்ந்து வருவோம்..'' என்று சொல்கிற வகையில்.. ஆடுகள் கூட்டம் பெண்ணை பின் தொடர்ந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளன.
இயற்கையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.. அதுவும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சற்று ஆசுவாசம் அடைய இயற்கை நிறைந்த சூழலில் பொழுதை கழிக்கவே பலரும் விரும்புகின்றனர்.
ஐடி துறை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் இளைஞர்கள் பலரும் அவ்வப்போது டிரெக்கிங் என்று சொல்லப்படும் மலையேற்றத்தில் ஆர்வம் காட்டுவதையும் காணலாம்.

பின் தொடர்ந்த ஆடுகள்
இயற்கையின் ரம்மியத்தை ரசித்துக்கொண்டு.. நீர் அருவிகளையும் ரசித்தபடி சென்றால் மனதில் இருக்கும் அத்தனை பாரங்களும் இறங்கிவிடும் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். இப்படி மலைப்பகுதிகளில் செல்லும் போது பெண் ஒருவரை பின் தொடர்ந்து ஆடுகள் கூட்டமாக வரும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

இயற்கை சூழலில்..
இன்ஸ்டகிராமில் எலினோர் ஸ்கோல்ஸ் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சில வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், சுற்றிலும் மரங்கள், செடி கொடிகள் என பச்சைப்பசேல் என நிறைந்து காணப்படுகிறது. மலைகளில் நடைபயணம் செய்வர்கள் செல்வதற்கு வசதியாக அங்கு ஒரு அழகான பாதையும் உள்ளது. ரம்மியமான இயற்கை சூழலில் பெண் ஒருவர் மெதுவாக ஓடி வருகிறர். அவரை பின் தொடர்ந்து ஆட்டு மந்தைகள் வருகின்றன.

லட்சக்கணக்கான லைக்
அந்தப்பெண்ணின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து வரும் ஆடுகள், அவர் ஓரிடத்தில் நின்றதும் ஆடுகளும் நின்று விடுகின்றன. பின்னர் வீடியோ எடுத்த நபரிடம் சில வினாடிகள் ஓடிவிட்டு அந்தப் பெண் ஓடத்தொடங்குகிறார். ஆடுகளும் நாங்களும் வருகிறோம் என பின்னாலாயே ஓடுகின்றன. மனதைக்கவரும் இந்தக் காட்சிகள் நெட்டிசன்களின் மனதை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயெ 1 கோடிக்கும் மேற்பட்ட பார்வாயளர்களை கடந்துள்ளது. லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

நெட்டிசன்கள் கருத்து
இந்த பதிவு மிகவும் ரசிக்க வைப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், இன்னும் எத்தனை மைல்கள் இப்படி ஓடினார்களோ என்று பதிவிட்டுள்ளார். பிரான்சில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ அந்த நாட்டின் இயற்கை அழகை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போல இருப்பதாக மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications