அதிசய சூரிய கிரகணம்.. இந்தியாவில் இருந்து ஏன் பார்க்க முடியாது? அடுத்து எப்போது வரும்? முழு விவரம்
வாஷிங்டன்: இன்று சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம். அடுத்த சூரிய கிரகணத்தை தமிழ்நாட்டில் கூட பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இது போன்ற ஒரு கிரகணம் பசிபிக் பகுதியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

சூரிய கிரகணம்: இந்த கிரகணத்தில் அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கும், பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கும் கிரகணம் ஆரம்பமாகும். இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம், முழு கிரகணமாக 10.08 மணிக்கு வரும். பிறகு அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் நம்மால் பார்க்க முடியாது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. இந்த கிரகணம் இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நீடிக்கும். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் நாசாவின் கூட்டுப் பணியான சோலார் ஆர்பிட்டரும் கிரகணத்தை கண்காணிக்கும்.
தமிழகம், கேரளாவில் தெரியும்: விண்வெளி நிலையத்தில் இருந்து பார்ப்பவர்களின் அனுபவம் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் அடங்கிய நேரடி நிகழ்ச்சியை நாசா நடத்துகிறது. இதேபோன்ற முழு சூரிய கிரகணம் வருகிற 2031-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி நிகழ்கிறது. அன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தெரியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ஆதித்யா விண்கலம்: இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலம் தற்போது, சூரியனில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் 1-வது புள்ளி' என்ற இலக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலத்திற்கு சூரிய கிரகணம் அகப்படாது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
சந்திரன் பின்னால் இருப்பதால்: விஞ்ஞானிகளின் தவறால் இது ஏற்படவில்லையாம்.. ஆனால், சூரியனை 24x7 அடிப்படையில் கண்காணிக்கும் நோக்கத்தில் விஞ்ஞானிகள் செயற்கை கோளை நிலை நிறுத்தியுள்ளார்கள். அதாவது, கிரகணத்தின் போது சூரியனின் பார்வை மறைந்து விடாத இடத்தில் செயற்கை கோள் தற்போது உள்ளது. விண்கலத்திற்கு பின்னால்தான் சந்திரன் இருப்பதால் இந்த சூரிய கிரகணத்தை ஆதித்யா எல் 1 காண முடியாதாம்..
எனினும், சூரிய கிரகணத்தின் போதும், ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்தத் துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுகளை மெற்கொண்டு வருகிறது.
உமிழ்வு கோடு: சூரியனில் ஏற்படும் மாற்றங்களையும், கதிர்வீச்சு பூமியை அடையாத போது ஏற்படும் போது என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டு சூரியனின் கதிர்களின் கதிர்வீச்சு மற்றும் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை இதன் மூலம் அறிய முடியும். சூரிய ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் புற ஊதா நிறமாலை ஆகியவற்றில் கிரகணத்தால் ஏதேனும் வேறுபாடுகள் ஏற்படுகிறதா. என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும்.
ஆதித்யா எல்-1 விண்கலத்தில் 6 கருவிகள் உள்ளன. கிரகண சூரியனை காணக்கூடிய உமிழ்வு கோடு 'கொரோனாகிராப்' மற்றும் 'புற ஊதா இமேஜிங்' போன்ற அறிவியல் தகவல்களை தொலைநோக்கி மூலம் கண்காணிக்கப்படும். இதுதொடர்பான புகைப்படங்களையும் எடுத்து அனுப்பும்" என்றும் விஞ்ஞானிகள் கூறினார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications