வாவ்.. குட் நியூஸ்! இந்த ஆண்டில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா உறுதி!
வாஷிங்டன் : இந்தியர்களுக்கு இந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட எச்-1பி மற்றும் எல் விசாக்கள் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை உயரதிகாரி டொனால்டு லூ தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு அதிகளவில் விசா வழங்கப்படுவதை உறுதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்டு லுா அளித்துள்ள பேட்டியில், "இந்தியர்களுக்கு இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை வழங்க உள்ளோம். குறிப்பாக மாணவர்கள் விசா மற்றும் குடியேற்ற விசாக்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.

அமெரிக்காவுக்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கோடைகாலம் முடிந்து பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய மாணவர்களுக்கு அதிகளவில் விசாக்களை வழங்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
பி1, பி2 விசா பெற முதல்முறை விண்ணப்பிப்பவர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி, எல் விசாக்கள் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்த விசாக்களை பெறுவதற்கான காத்திருப்பு காலம் தற்போது 60 நாட்களுக்கு குறைவாக உள்ளது.
அமெரிக்காவில் குறிப்பிட்ட பணி விசாக்களின் கீழ் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டிலேயே அவர்களின் விசாவை புதுப்பித்துக் கொள்வதற்கான நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விசா புதுப்பிப்புக்காக அவர்கள் சொந்த நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை.
இது அமெரிக்க மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானது. தற்காலிக பணியாளர்கள் அமெரிக்காவில் விசாக்களை புதுப்பிதற்கான பணிகளை நாங்கள் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் விசாக்களை புதுப்பிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டியது குறையும்" என டொனால்டு லூ தெரிவித்துள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications