ஈரானுக்கு கடும் வார்னிங்.. இஸ்ரேல் நடத்தும் பெரிய ‛அட்டாக்’.. அமெரிக்க உளவுத்துறையால் கசிந்த தகவல்
வாஷிங்டன்: ஈரானை குறிவைத்து இஸ்ரேல் பெரிய சதித்திட்டம் தீட்டி உள்ளது. விரைவில் ஈரான் மீது பெரிய அட்டாக்கிற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. அதேபோல் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இப்போது மோதல் என்பது வலுப்பெற்றுள்ளது.

காசா மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்து போர் விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இப்படியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் மோதி வருகிறது. அதோடு இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்துள்ளார். இவர் ஈரான் மீது கடும் கோபத்தில் உள்ளார். ஈரானுக்கு எதிரான செயல்களை செய்வதில் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் கொண்டவர். இதனால் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் ஈரான் நடுங்கி போய் உள்ளது. அதோடு கடந்த மாதம் 4ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினர். இது ஈரானுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு டொனால்ட் டிரம்பை ஈரான் படுகொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக சமீபத்தில் டொனால்ட் டிரம்ப், ‛‛என்னை ஈரான் படுகொலை செய்ய முயன்றால் அந்த நாடு இருக்காது. மொத்தமாக ஈரான் அழிக்கப்படும். அந்த நாட்டில் ஒன்றுமே இல்லாத அளவுக்கு அழிக்கப்படும். இந்த நடவடிக்கை தொடர்பாக ஆலோசகர்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
இதுவே ஈரான் மீதான டொனால்ட் டிரம்பிற்கு இருக்கும் உறவை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இப்படியான சூழலில் தான் தற்போது அமெரிக்கா செய்தி நிறுவனங்கள் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளன. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛ஈரான் மீது இஸ்ரேல் இந்த ஆண்டு மத்தியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதல் என்பது ஈரானின் அணு திட்டங்களை முடக்கும் வகையில் அதற்கான மையங்களை நோக்கியே நடத்தப்பட உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறை சார்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் ஈரான் கடும் டென்ஷனாகி உள்ளது. ஈரான் தற்போது வரை அணு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான மோதல் காரணமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியை தொடங்க ஈரான் ரகசியமாக தயாராகி வருகிறது. இப்படியான சூழலில் தான் அந்த அணு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இப்போது ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எதிரிகள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். குறிப்பாக அணு மையங்களை சார்ந்து மிரட்டல் என்பது இருக்கும். நம் நாட்டின் அணு மையங்களை குறிவைத்து எதிரிகள் அழித்தால் நாங்கள் மீண்டும் அதனை கட்டுவோம். 100 அணு மையங்களை அழித்தால் நாங்கள் 1,000 அணு மையங்களை கட்டுவோம். உங்களால் கட்டடங்களை மட்டுமே தாக்கி அழிக்க முடியும். ஆனால் அந்த கட்டடங்களை உருவாக்கும் மக்களை உங்களால் தாக்கி அழிக்க முடியாது'' என்று கூறி பதிலடி தெரிவித்துள்ளார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications