இந்தியா கனடா மோதல்.. திடீரென உள்ளே வரும் அமெரிக்கா? அந்த 5 பேரும் சொல்லும் மேட்டரை நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: இந்தியா கனடா உறவு தொடர்ந்து மோசமடையும் நிலையில், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கனடா உறவு சில காலத்திற்கு முன்பு வரை நன்றாகவே இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை எளிமையாக்கத் தீவிர பேச்சுவார்த்தைகளும் கூட முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், அவை திடீரென நிறுத்தப்பட்டது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இரு நாட்டு உறவு மோசமடைய காரணம்.
இந்தியா கனடா உறவு: ஏற்கனவே, கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அங்குள்ள இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய போதிலும் கனடா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் ட்ரூடோவின் இந்த பேச்சு இரு நாட்டு உறவை மோசமாக்கியது.
இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா கனடா உறவு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அமெரிக்கா முதலில் எதுவும் சொல்லவில்லை. இருப்பினும், பின்னர் மெதுவாகவும் வெளிப்படையாகவும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
உள்ளே வரும் அமெரிக்கா: இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கனடா இடையே பேக் சேனல் பேச்சுக்கள் குறித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிஜ்ஜார் கொலை குறித்து கனடா பொதுவெளியில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய பிறகு ஐந்து மூத்த அமெரிக்க அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, அமெரிக்கா இந்தியாவுக்கான தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன் ஆகியோர் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.
சொல்லும் மேட்டர் ஒன்று தான்: அவர்கள் 5 பேர் வெவ்வேறு இடங்களில் பேசியிருந்தாலும் அதன் சாரம்சம் ஒன்று தான்.. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொள்கிறது. அதேநேரம் கனடா உடனடியாக தீவிர நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்றும் கூறுகிறது. இதுதான் இப்போது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் இந்தியா கனடா இடையே பேக் சேனல் பேச்சுவார்த்தைக்கும் அமெரிக்கா முயன்று வருகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது நியூயார்க்கில் இருக்கிறார்.. அவர் அமெரிக்காவின் டாப் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது இது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், நமது நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உடன் இது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வரும் காலத்தில் இந்தியா கனடா விவகாரத்தில் முக்கிய நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications