ராணுவ வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியது.. பலர் பலி.. அதிர்ச்சியில் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி பகுதியில் உள்ள ராணுவ வெடிமருந்து ஆலை இன்று திடீரென்று வெடித்தது. இதில் பலர் பலியாகி உள்ள நிலையில் பலரும் மாயமாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள முக்கிய மாகாணங்களில் ஒன்று டென்னசி. இந்த மாகாணத்தின் தலைநகராக நாஷ்வில் உள்ளது. நாஷ்வில்லில் இருந்து 97 கிலோமீட்டர் தூரத்தில் தென்மேற்கு பகுதியில் பக்ஸ்நார்ட் என்ற இடத்தில் மலை உள்ளது.

இங்கு அக்யூர்ட் எனர்ஜெடிக் சிஸ்டம்ஸ் என்ற பெயரில் வெடிமருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது 8 கட்டடங்களுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க ராணுவத்துக்கான வெடிமருந்து மற்றும் சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று ராணுவ வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் பலர் பலியாகி உள்ளனர். மேலும் பலரும் மாயமாகி உள்ளனர். வெடிமருந்து ஆலை என்பதால் அங்கு தீ அதிகமாக எரிந்து வருகிறது.
இதனால் மீட்பு பணி தாமதமாகி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த ஆலை வெடித்து சிதறியபோது அதன் சத்தம் பல மைல் தொலைவுக்கு கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அக்யூரேட் எனர்ஜெட்டிக் சிஸ்டம் நிறுவனம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இந்த வெடிவிபத்து காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கி உள்ளன. இதனை லோபில்வில்லி பகுதியில் வசிப்போர் உறுதி செய்துள்ளனர். இந்த லோபில்வில்லி ஆலை இருக்கும் இடத்தில் 20 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
இதுபற்றி ஹம்ப்ரிஸ் கவுண்டி ஷெரிப் கிறிஸ் டேவிஸ் கூறுகையில், ‛‛பலரின் நிலை என்னவென்று தெரியவில்லை. முதற்கட்டமாக சிலர் இறந்துள்ளனர். இது உண்மை தான். அவர்களின் குடும்பங்கள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் உள்ள மீட்பு குழுவினருடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.
தற்போதைய நிகழ்வு பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஆலை வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தப்படும். ஆனால் விசாரணை முடிவு வர பல நாட்கள் ஆகலாம்'' என்றார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications