தொலைந்த உலகம் கண்டுபிடிப்பு.. பால்டிக் கடலுக்கடியில் மெகா கட்டமைப்பு! வரலாற்று ஆய்வில் புதிய திருப்பம்
வாஷிங்டன்: ஐரோப்பாவில் பால்டிக் கடலுக்கு அடியில் 11 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கட்டுமானத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கற்காலத்தில் மனித வாழ்க்கை முறை குறித்த ஆய்வுக்கு இந்த கண்டுபிடிப்பு புதிய திருப்பு முனையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தரப்பில் நம்பப்படுகிறது. கற்கால மனிதர்கள் வேட்டையாடுவதற்காக இந்த கட்டுமானத்தை உருவாக்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நாம் வாழும் இந்த பூமியானது எத்தனை கோடி ஆண்டுகள் பழமையானது என்பதை அறிவியல் ஆய்வாளர்களால் தற்போது வரை உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. இந்த பூமியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக சமூகம் இருந்து இருக்கலாம் என்றும் அதன்பின்னர் ஏற்பட்ட கால மாற்றம் இயற்கை பேரிடர் போன்றவற்றால் அவை அழிந்து இருக்கலாம் என்று கூட விஞ்ஞானிகளாலும் ஆய்வாளர்களாலும் ஒரு கூற்று சொல்லப்படுகிறது.

பால்டிக் கடலுக்கு அடியில்
இது தொடர்பாக விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், பால்டிக் கடலுக்கு அடியில் மெகா கட்டமைப்பு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பாவில் மனிதனால் கட்டப்பட்ட பழமையான கட்டமைப்பாக இது இருக்கலாம் என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
8500 ஆண்டுகளாக மூழ்கியிருக்கிறது
பிளிங்கர்வால் (Blinkerwall) என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படும் இந்த கட்டமைப்பு 1,670 தனி கற்களாலும், 300 பெரிய பாறைகளாலும் கட்டப்பட்டு இருக்காலமாம். ஜெர்மனி நாட்டில் உள்ள கீல் பல்கலைககழகத்தை சேர்ந்த புவி இயற்பியலாளர் ஜேக்கப் கீர்சன் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. கற்காலத்தின் போது, ஏரி அல்லது சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதியில் வேட்டைக்காரர்கள் இந்த சுவரை கட்டி எழுப்பியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
பிளிங்கர்வால் என்பது கலைமான்களை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பாதையாக இருக்கலாம். விலங்குகளை எளிதாக வேட்டையாடுவதற்கு வசதியாக ஒரு குறுகிய பாதைக்குள் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8,500 ஆண்டுகளாக மூழ்கியிருந்தாலும், இந்த கட்டமைப்பு இத்தனை ஆண்டுகள் அப்படியே இருப்பது வியக்கும் படியாக அமைந்துள்ளது.
பண்டைய கால மக்கள் வாழ்க்கை முறை
இது ஆரம்பகால வேட்டைக்காரர் சமூகங்களின் வாழ்வாதார முறைகள் மற்றும் சமூக பொருளாதார சிக்கலான தன்மைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை மதிப்பீடும் வகையில் இது அமைந்து இருக்கிறது. இதுவரை கண்டறியப்பட்டடவைகளில் வேட்டையாடுவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு பழமையான கட்டமைப்பாக இந்த கட்டிடம் அறியப்படுகிறது.
மேலும் ஐரோப்பாவில் அறியப்பட்ட மிகப்பெரிய கற்கால கட்டமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். "மேற்கத்திய பால்டிக் கடல் பகுதியில் பண்டைய கால மக்களின் வாழ்வாதார உத்திகள், நடமாட்ட முறைகள் மற்றும் பிராந்திய வளர்ச்சி உள்ளிட்டவற்றைகளை புரிந்துகொள்வதற்கு இது முக்கியமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய ஆதாரமாக இருக்கும்
அதாவது, கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட ஆய்வுக்கும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 11,000 ஆண்டுகள் பழமையான கட்டுமானமானது, அக்கால மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் வேட்டைத் திறன்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பால்டிக் கடல் என்பது, மத்தியதரைக் கடலை சார்ந்து அமைந்துள்ள ஒரு கடல் ஆகும். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த கடலை ஒட்டி டென்மார்க், பின்லாந்து, லித்துவேனியா, போலந்து, உருசியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications