ஆராய்ச்சி பிரிவில் அண்ணா பல்கலை. முதலிடம்! அடித்து சொன்ன சர்வதேச அமைப்பு.. அடுத்தது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையை Quacquarelli Symonds என்ற அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதில் ஆய்வு பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் தேசியளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் QS- Quacquarelli Symonds என்ற அமைப்பு சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையை வெளியிடுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான லிஸ்டை அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Anna university education

அதில் சுமார் 61 சதவீத இந்தியப் பல்கலைக்கழகங்களின் ரேங்கிங் மேம்பட்டுள்ளது.. இதில் சர்வதேச அளவில் பிரிட்டனில் உள்ள எம்ஐடி 13வது முறையாக 'உலகின் சிறந்த கல்வி நிறுவனம்' என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியளவில் பார்க்கும் போது ஐஐடி மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச ரேங்கிங்: சர்வதேச அளவில் பார்க்கும் போது மும்பை ஐஐடி கடந்தாண்டு 149ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு அது 31 இடங்கள் உயர்ந்து 118 இடத்தை பிடித்துள்ளது. அடுத்து ஐஐடி டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc) இந்தியளவில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இது தேசியளவில் முறையே 150 மற்றும் 211ஆவது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்து ஐஐடி காரக்பூர் (சர்வதேச அளவில் 222)ஐஐடி சென்னை (சர்வதேச அளவில் 227) இடங்களைப் பிடித்துள்ளது. அடுத்து ஐஐடி கான்பூர், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை தேசியளவில் 6 மற்றும் 7ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. தொடர்ந்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ரூர்க்கி (ஐஐடிஆர்), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் குவஹாத்தி (ஐஐடிஜி) மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் தேசியளவில் டாப் 10 இடங்களுக்குள் வருகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மொத்தம் 61 சதவீத இந்தியப் பல்கலைக்கழகங்களின் ரேங்கிங் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு உயர்ந்துள்ளன. அதேநேரம் 24 சதவீத பல்கலைக்கழகங்கள் தங்கள் ரேங்கிங்கை தக்கவைத்துள்ளன. மறுபுறம், 9 சதவீத பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் சரிந்துள்ளன.

டெல்லி பல்கலைக்கழகம்: அதிகபட்சமாக டெல்லி பல்கலைக்கழகம் தேசிய அளவில் இந்த ரேங்கிங்கில் அதிகபட்ச முன்னேற்றத்தை அடைந்துள்ளது.. இந்தாண்டு சுமார் 79 இடங்கள் முன்னேறி அது 328வது இடத்தை பிடித்துள்ளது..

அதேபோல ஆய்வுகளில் சிறந்து இருக்கும் பல்கலைக்கழகங்கள் குறித்த ரேங்கிங்கும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் இந்தாண்டு ஆராய்ச்சி பிரிவில் கணிசமாக முன்னேறி இருக்கிறது. ஆராய்ச்சி பிரிவில் சர்வதேச சராசரி 23.5 மார்க்காக இருக்கும் நிலையில், இந்தியா அதை விட கூடுதல் மார்க் அதாவது 37.8ஐ பெற்றுள்ளது. ஆசியளவில் பார்க்கும் போது சீனாவுக்குப் பிறகு ஆராய்ச்சி பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்: ஆராய்ச்சி பிரிவைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகம் (100 மதிப்பெண் CpF) இந்தியாவில் சிறந்ததாக உருவெடுத்துள்ளது.. அதைத் தொடர்ந்து இந்திய அறிவியல் கழகம் (99.9 மதிப்பெண் CpF) இரண்டாவது இடத்தையும், IIT குவஹாத்தி (97.6 மதிப்பெண் CpF) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொள்வது இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. சர்வதேச அளவிலான ஆசிரியர்கள், சர்வதேச மாணவர் குறைவாக இருப்பது இந்தியாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதில் இந்தியா பின்தங்கியே இருக்கிறது.

சர்வதேச மாணவர்கள் விகிதத்தின் சர்வதேச சராசரி 26.5ஆக இருக்கும் நிலையில், இந்தியா வெறும் 2.9 மார்க் மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல், சர்வதேச ஆசிரியர்களின் சராசரியிலும் இந்தியா மிகக் குறைவாக 9.3 மட்டுமே பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+