பெரிய சிக்கல்! கைதாகும் டிரம்ப்! "உங்களுக்கு இன்னும் 10 நாள்தான் டைம்!" பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு பிடிவாரண்ட் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப்.. அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய அதிபர்கள் என்ற லிஸ்டை எடுத்தால் அதில் நிச்சயம் டிரம்பும் இடம் பெற்றிருப்பார்.

அந்தளவுக்கு அதிபராக இருக்கும் போது அவர் எடுத்த பல முடிவுகள் சர்ச்சையானது.. தான் கடந்த 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பைடன் தோற்கடித்தார்.
டிரம்ப்: இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தனக்கு எதிராக மிகப் பெரிய முறைகேடு நடந்ததாக தொடர்ந்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டினார்.. பல பகீர் புகார்களையும் அவர் முன்வைத்தார். இதனால் அங்கு பெரும் வன்முறையே ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வன்முறையாளர்கள் சிலர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இது அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிராகப் பிடி வாரண்ட பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடன் சேர்த்து 18 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜியா நீதிபதி தெரிவித்துள்ளார். அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தானாக வந்து சரணடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
13 புகார்கள்: ஜார்ஜியா மாநிலத்தில் அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது மொத்தம் 13 புகார்கள் முன்வைக்கப்பட்டது.. அவர் வேண்டுமென்றே பொய் சொல்லித் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றது உறுதி என ஜூரி தெரிவித்த நிலையில், டிரம்பிற்கு இப்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களை வைத்துப் பொய் சொல்வது, அதிபராகப் பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழியை மீறுவது எனப் பல புகார்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
டிரம்புடன் சேர்ந்து 18 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் மற்றும் முன்னாள் நியூயார்க் நகர மேயர் ரூடி கியுலியானி ஆகியோர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கைது செய்யப்பட்டாலும் கூட அவர் சிறையில் இருக்கத் தேவையில்லை. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அவருக்கு அளிக்கப்படும் தீர்ப்பைப் பொறுத்தே சிறை செல்ல வேண்டி இருக்கும். இது நடக்கப் பல மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடி வாரண்ட்: இது குறித்து நீதிபதி ஃபானி வில்லிஸ் கூறுகையில் கூறுகையில், "தவறு செய்தற்கான முகாந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஜார்ஜியா சட்டத்தின் வழக்கமான நடைமுறையாக இந்த கைது வாரண்ட்களை வெளியிடப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் டிரம்ப் உள்ளிட்டோர் தானாக முன்வந்து சரணடைய நான் வாய்ப்பளிக்கிறேன்..
ஜார்ஜியாவில் தேர்தல் முடிவில் தவறு இருக்கிறது என்று நினைத்தால் அதற்கு நீதிமன்றத்திற்கு வரலாம்.. இப்படிச் செய்யக் கூடாது" என்றார். அடுத்த 6 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு கட்சி சார்பில் அடுத்தாண்டு மீண்டும் போட்டியிட விரும்பிய டிரம்பிற்கு எதிராக செக் வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
யார் இவர்: மிகவும் முக்கியமான இந்த தீர்ப்பை அளித்தவர் ஃபானி வில்லிஸ்.. இவர் அடிப்படையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சியின் சிந்தனை கொண்டவர்.. நீண்ட காலம் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த இவர், 2020இல் மாவட்ட நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இந்த பதவிக்கு வந்த முதல் கறுப்பினப் பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றார்.அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை சேர்ந்த இவரது தந்தையும் ஒரு வழக்கறிஞர் ஆவர். இவர் தான் இப்போது டிரம்பிற்கு சிக்கலைத் தரும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications