நிலவுக்கு செல்லும் Artemis II விண்கலத்தின் டாய்லெட்டில் திடீரென வந்த மர்ம வாடை! என்ன நடந்தது?
வாஷிங்டன்: 4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் ஆர்டெமிஸ் 2 விண்கலம், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செல்லும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேவேளையில், விண்கலத்தின் டாய்லட் பகுதியில் இருந்து வந்த எரிந்த வாடை விண்வெளி வீரர்களை பரபரப்பு அடைய வைத்து இருக்கிறது.
நிலவை ஆய்வு செய்வதற்காக 4 விண்வெளி வீரர்களுடன் ஆர்டெமிஸ் II திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி, ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோச், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

டாய்லெட்டில் இருந்த எரிந்த வாசனை
இதில் மூன்று அமெரிக்கர்கள், ஒரு கனடா வீரர் அடங்குவர். நிலவில் தரையிறங்காமல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் பயணித்து, இதுவரை யாரும் பார்க்காத நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இந்த விண்வெளி பயணம் சுமார் 10 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்னடி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளி வீரர்களுடன் விண்கலம் புறப்பட்டது. இந்த விண்கலம் தற்போது நிலவை நெருங்கியுள்ளது. இதற்கிடையே, ஆர்டெமிஸ் விண்கலத்தில் உள்ள டாய்லெட்டில் வந்த எரிந்த வாசனை விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நவீன வசதிகளுடன் கட்டமைப்பு
விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட உடனேயே அதன் கழிவறையின் சிறுநீர்க்குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக அங்கு இருந்த விண்வெளி வீராங்கனை சரி செய்தார். 23 மில்லியன் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லெட், விண்வெளி வீரர்கள் தங்கியிருக்கும் அறைக்கு கீழ் பகுதியில் உள்ளது.
ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் விண்வெளி வீரர்கள் பயணிப்பதால், அவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த டாய்லெட் நவீன வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட கழிப்பறை அமைப்பு பகுதியில் இருந்து திடீரென எரியும் வாசனை போன்ற வாடை வீசியதால் சில மணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.
எரிந்த வாடை வந்ததாக
விண்வெளி வீரர்கள் இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், அந்த வாசனை பழைய மின்சார ஹீட்டர் (electric heater) நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தபோது வரும் எரியும் மணத்தைப் போன்றதாக இருந்தது. விண்வெளி வீராங்கனை கோச் கூறுகையில், கழிப்பறை பகுதியில் இருந்து எரியும் ஹீட்டர் மாதிரி வாசனை பலமுறை வந்தது என்று மிஷன் கண்ட்ரோல் யூனிட்டுக்கு தெரிவித்தார்.
இந்த வாடை எதனால் வந்தது என்பது இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட உடன் கழிப்பறையின் சிறுநீர் குழாய் (urine hose) பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை கோச் மறுநாளே சரி செய்தார். இந்த சூழலில் தான் தற்போது எரிந்தது போல வாடை வந்ததாக கூறப்பட்டுள்ளது திகிலை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
இது பற்றி நாசா விண்வெளி ஆய்வு வீரர்கள் கூறியதாவது:- கழிப்பறை கதவின் அருகில் உள்ள ஆரஞ்சு நிற insulation பொருளிலிருந்து இந்த வாசனை வந்திருக்கலாம் என்று நாசா அதிகாரிகள் முதலில் சந்தேகித்தனர். இதனால் பெரிய ஆபத்து ஏதுமில்லை என்றும், விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அந்த கழிப்பறையை பயன்படுத்தலாம் என்றும் மிஷன் கண்ட்ரோல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கழிவறையில் இருந்து வந்த வாசனையின் காரணம் தெளிவாக இன்னும் தெரியாத நிலையில், தற்போதைக்கு இந்த பிரச்சினை விண்வெளிப் பயணத்திற்கு உடனடியாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications