டைனோசர்களை அழித்ததை போல.. மனிதர்களை அழிக்க வரும் விண்கல்! விஞ்ஞானிகள் வார்னிங்
வாஷிங்டன்: '2025 PM2' என்ற விண்கல் தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில், அதாவது 2.31 மில்லியன் மைல் தொலைவில், கடந்து செல்லும் என்று நாசா எச்சரித்திருக்கிறது.
2.31 மில்லியன் மைல் தொலைவு என்பது அதிகமாக தோன்றலாம். ஆனால், இது செவ்வாய் கிரகத்தை விட நெருக்கமான தொலைவாகும். நிலவு பூமியிலிருந்து சுமார் 238,900 மைல் தொலைவில் உள்ளது. இந்த விண்கல் சந்திரனின் தூரத்தை விட பத்து மடங்கு அதிகமான தொலைவில் இருக்கிறது.

இந்த விண்கல் சுமார் 190 அடி அகலம் கொண்டது, மேலும் மணிக்கு 41,390 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இவ்வளவு வேகத்தில் பயணித்தாலும், இது பூமிக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்பதால், இது ஒரு முக்கியமான ஆய்வுக்குரிய பொருளாகவே கருதப்படுகிறது. இந்த விண்கல் கடந்து செல்லும் போது பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். டைனோசர்கள் கூட இதுபோன்ற ஒரு விண்கல் மோதித்தான் அழிந்து போனது. இந்த விண்கல் மோதினால் கணிசமான அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும்.
ஆனால் நல்வாய்ப்பாக இந்த விண்கல் நம்மீது மோதாது ஒரு விண்கல்லை "அபாயகரமானது" என வகைப்படுத்த இரண்டு நிபந்தனைகளை நாசா நிர்ணயித்துள்ளது. ஒன்று விண்கல் பூமிக்கு 7.4 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திற்குள் கடந்து செல்ல வேண்டும். இரண்டாவதாக விண்கல் 85 மீட்டருக்கும் அதிகமான அளவு கொண்டதாக இருக்க வேண்டும். 2025 PM2 எனும் விண்கல் இரண்டாவது நிபந்தனையை பூர்த்தி செய்திருந்தாலும் அது பூமிக்கு போதுமான தூரத்திற்குள் வரவில்லை.
இந்த விண்கல் குறித்து ஆய்வாளர்க்ள கூறுகையில், ஏதென் விண்மீல் குழுவிலிருந்த இந்த விண்கல் வந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இவை பூமியின் சுற்றுப்பாதையை கடக்கும் தன்மை கொண்டவை, ஆனால் பொதுவாக நிலையான பாதைகளை பராமரிக்கின்றன.
இந்த விண்கல் பாதுகாப்பானதாக கடந்து சென்றாலும், விஞ்ஞானிகள் இதை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். ஈர்ப்பு விசை காரணமாகவோ, பிற விண்வெளிப் பொருட்களுடன் மோதல் போன்ற காரணமாகவோ இந்த விண்கல் பாதையை மாற்றலாம். அப்படி மாறினால் அது பூமிக்கு ஆபத்தானதாக மாற்றும். எனவேதான் அதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
2025 PM2 மட்டுமின்றி, பல சிறிய விண்கற்களும் சமீப நாட்களில் பூமியைக் கடந்து சென்றுள்ளன. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் 2023 PX என்ற 73 அடி விண்கல் ஆகஸ்ட் 22 அன்று 577,000 மைல் தூரத்திற்குள் கடந்து சென்றதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 2025 QY மற்றும் 2025 QE2 என்ற 45 மற்றும் 110 அடி அளவிலான இரண்டு விண்கற்களும் அதிக தூரங்களில் இருந்து பூமிக்கு அருகாமையில் வந்து சென்றன.
பெரிய விண்கற்கள் அரிதானவை, ஆனால் மிகவும் ஆபத்தானவை. சுமார் 160 அடி அளவிலான விண்கல் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கி அழிவை ஏற்படுத்தலாம். 500 அடி மற்றும் அதற்கும் அதிகமான சைஸ் கொண்ட விண்கற்கள் நகரங்கள் அல்லது மாநிலங்கள் முழுவதும் சேதத்தை ஏற்படுத்தலாம், இருப்பினும் இத்தகைய தாக்கங்கள் 20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கின்றன.
3,000 அடிக்கு மேல் உள்ள விண்கற்கள் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தலாம், இது 700,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆறு மைல்களுக்கும் அதிகமான பெரிய விண்கற்கள் பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்தும், இவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கும் என்று கருதப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications