Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025 ஆம் ஆண்டில் பணக்காரர்கள் ஆக போகும் 5 ராசியினர் யார் யார்? பாபா வங்கா கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 42 நாட்களே உள்ள நிலையில் பல்கேரியாவை சேர்ந்த பார்வையிழந்த பாபா வங்கா சில கணிப்புகளை குறிப்புகளில் தெரிவித்துள்ளார். அதில் வரும் 2025 ஆம் ஆண்டு 5 ராசிக்காரர்கள் பணக்காரர்கள் ஆகும் யோகம் உண்டு என கணித்துள்ளார்.

பெரும்பாலும் பாபா வங்காவின் கணிப்புகள் பலித்துள்ளதால் இந்த 5 ராசிக்காரர்களும் துள்ளி குதித்துள்ளார்கள். இன்னும் சிலர், "அந்த அம்பானி வீடு எவ்ளோனு கேளு" , "அட்லீஸ்ட் அவர் கம்பெனியாவது என்ன விலைனு கேளு" என அலப்பறை செய்து வருகிறார்கள்.

baba vanga new year 2025 2025

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா தனது 85 ஆவது வயதில் 1996ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவருக்கு 12 வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இரு கண்களிலும் பார்வையை இழந்துவிட்டார். உலகில் நிகழக் கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்லியிருக்கிறார்.

பார்வை பறி போன நிலையில் எதிர்காலத்தை கணிக்கக் கூடிய சக்தி அவருக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. 1911 ஆம் ஆண்ட வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பாபா வங்கா பிறந்தார். இவர் ஒரு மூலிகை மருத்துவர். பல்கேரிய ஆன்மீகவாதியாகவும் அறியப்படுகிறார்.

இதுவரை 5079 ஆண்டுகளுக்காக கணிப்புகளை வைத்துள்ளார். இவர் இறந்த போதிலும் இவரது கணிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இவரது கணிப்பில் முக்கியமானவை 9/11 பயங்கரவாத தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், சூரிய புயல், ஐரோப்பாவில் அணு உலையில் வெடிப்பு ஏற்படலாம் என்பனவாகும். வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்தால் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் உள்ளிட்ட கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இவற்றில் 80 சதவீதம் நடந்துள்ளன. இதனால் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு பாபா வங்காவின் கணிப்புகளை மக்கள் ஆர்வத்துடனுடம் சற்று பயத்துடனும் எதிர்நோக்குவர். அந்த வகையில் இந்த புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

மேஷம்: பாபா வங்காவின் கணிப்புபடி, 2025 ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமையும். வசதி வாய்ப்புகள், காசு பணம், எல்லாமே கனவில் மட்டும் நீங்கள் அனுபவிப்பது போல் இல்லாமல் நிஜத்திலேயே உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆண்டு நீங்கள் சாதனை செய்வதற்கான ஆண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்குத்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான அதிர்ஷ்டம், பண வாய்ப்புகள் எல்லாமே கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் முதல் ராசி மேஷம் தான். இனி இந்த உலகமே உங்களுடையதுதான் என கணித்துள்ளார்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களே பாபா வங்காவின் கணிப்புபடி, வரும் 2025ஆம் ஆண்டு உங்கள் வாழ்வில் மிகப் பெரிய உயரத்தை அடைவீர்கள். உங்கள் ராசியில் சனிபகவானின் ஆதிக்கத்தால் உங்களை சுற்றி ஆக்கப்பூர்வமான ஆற்றல் உங்களை சுற்றி பெருகுவதை உணர்வீர்கள். சனி கிரகம் நீங்கள் தைரியமாக உங்கள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு வலிமையை தருவார். 2025 இல் எல்லா கிரகங்களும் ஒன்றிணைந்து உங்களுக்கு நன்மையை செய்யும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு நிதிச்சுமையை சரி செய்து செல்வத்தை பெருக்கும் ஆண்டாகும். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு வரும் 2025 இல் பலன் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கான முடிவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். நிதி விவகாரத்தில் ஸ்திரத்தன்மை கிடைக்கும். அது போல் நிலையான முதலீட்டு வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். ஒவ்வொரு மணியும், நிமிடமும் நொடியும் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறும். கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் ஓய்வில்லாத உங்கள் உழைப்பு நிச்சயம் பிறரால் போற்றப்படும். எல்லா கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய தொழில்களை தொடங்கும் பொன்னான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்: இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு மாற்றம் நிகழ்வதற்கான ஆண்டாக மட்டும் இல்லாமல் பொன்னான வாய்ப்புகளின் வாசற்கதவுகள் உங்களுக்காக திறக்கும். இதனால் உங்கள் நிதி நிலைமை உயரும். தனிப்பட்ட வாழ்வும் மேம்படும். உங்கள் முன் இருக்கும் சவால்களை முறியடிக்கும் நேரம் இது. கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் நிதி நிலைமை மேம்படும். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். எதற்கும் தயங்காதீர்கள். இது உங்கள் ஆண்டு. இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு நீங்கள் விதைக்கும் விதையாகும்.

இவ்வாறு பாபா வங்கா இந்த 5 ராசிக்காரர்களுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை கணித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+