கட்டிலுக்கு கீழே மான்ஸ்டர்.. குற்றவாளியை நைசாக காட்டிக்கொடுத்த சுட்டி குழந்தை! இப்படியுமா நடக்கும்!
வாஷிங்டன்: கட்டிலுக்கு அடியில் மான்ஸ்டர் இருப்பதாக குழந்தை கூறியதையடுத்து, சோதனை செய்தபோது குற்றவாளி ஒருவர் சிக்கியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கெனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. இனி உங்கள் வீட்டு குழந்தையும் கட்டிலுக்கு அடியில் மான்ஸ்டர் இருக்கிறது என்று சொன்னால் எதுக்கும் ஒரு முறை செக் செய்துக்கொள்ளுங்கள்.

மான்ஸ்டர் பயம்:
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள குடும்பத்தினர் வேலை காரணமாக குழந்தையை கவனித்துக்கொள்ள பராமரிப்பாளரை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த பராமரிப்பாளருக்கு பேபிசிட்டர் என்று பெயர். இவர் வீட்டிற்கு வந்து குழந்தையை கவனித்துக்கொள்வார். சம்பவம் நடந்த அன்று கட்டிலுக்கு அடியில் மான்ஸ்டர் இருக்கிறது என்று குழந்தை கூறியிருக்கிறது. ஏலியன் படங்களை பார்த்துவிட்டு, குழந்தைகள் இப்படி விளையாட்டாக பயப்படுவது இயல்பானதுதான்.
கட்டிலுக்கு அடியில் மான்ஸ்டர்:
அப்படித்தான் இந்த குழந்தையும் விளையாட்டுக்கு சொல்கிறது என்று பேபிசிட்டர் அசால்ட்டாக இருந்திருக்கிறார். ஆனால், குழந்தை விடவில்லை. மான்ஸ்டர்.. மான்ஸ்டர் என்று கத்தி கூச்சலிட்டிருக்கிறது. என்னடா இது.. நானே ஒரு பெரிய மான்ஸ்டர்தான் என்னை விட பெரிய மான்ஸ்டர் இங்கு யார்? என்று கேள்வி கேட்டுக்கொண்டே பேபிசிட்டர் குழந்தையின் கட்டிலுக்கு அடியில் குணிந்து பார்த்திருக்கிறார். அங்கு உன்மையாகவே ஒரு இளைஞர் இருந்துள்ளார். இதை பார்த்து பேபிசிட்டர் அலற.. அதை பார்த்து குழந்தை அலற, இருவரும் அலறியதால் அந்த இளைஞனும் கத்த, சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் அதிர்ச்சியில் சத்தம் போட.. ஒரே கூத்தாக மாறியிருக்கிறது.
எஸ்கேப் ஆன இளைஞர்:
இந்த கேப்பில் அந்த இளைஞர் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். சம்பவம் குறித்து குழந்தையின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர் ஏற்கெனவே இந்த வீட்டில் குடியிருந்தது தெரிய வந்தது. மட்டுமல்லாது வாடகை பாக்கி காரணமாக அவர் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் மீண்டும் மீண்டும் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்திருக்கிறார்.
குற்ற பின்னணி:
இதனால் ஓனர், போலீசில் புகார் அளித்து, இளைஞர் மீண்டும் இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று தடை உத்தரவை வாங்கியிருக்கிறார். இந்த உத்தரவை மீறிதான் குழந்தையின் கட்டிலுக்கு அடியில் தலைவன் பதுங்கியிருந்திருக்கிறான். ஏற்கெனவே இந்த இளைஞர் மீது சில குற்ற வழக்குகள் இருக்கின்றன. 10 நாட்களுக்கு முன்னர்தான் அவர் பெயிலில் வெளியே வந்திருக்கிறார். வந்த கையோடு இப்படி அத்துமீறி குழந்தையையும், அதன் பராமரிப்பாளரையும் பயமுறுத்தியுள்ளார். வீட்டிலிருந்து தப்பிக்கும்போது குடும்பத்தினரை தாக்கியுள்ளார்.
அதிரடியில் போலீஸ்:
சம்பவ தினத்தன்று வீட்டை சுற்றிய பகுதியில் போலீசார் சல்லடை போட்டு சலித்திருக்கின்றனர். ஆனால் இளைஞர் சிக்கவில்லை. அடுத்த நாள் எப்படியோ இளைஞரை போலீஸ் கைது செய்திருக்கிறது. அவர் மீது அத்துமீறுதல், தடை உத்தரவை மீறி பிரவேசித்தல், அச்சுறுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பெயில் உடனடியாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி இளைஞருக்கு பெயில் கிடைக்காது என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இனி உங்கள் வீட்டு குழந்தையும் கட்டிலுக்கு அடியில் மான்ஸ்டர் இருக்கிறது என்று சொன்னால் எதுக்கும் ஒரு முறை செக் செய்துக்கொள்ளுங்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications