மரணத்தில் இருந்து கம்பேக்! "63 நாட்கள் எதுவுமே இல்லை!" செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த ஒளி! வியப்பு
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள சிக்னல் ஆய்வாளர்களுக்குப் பயங்கர மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அங்கே என்ன நடந்தது, ஏன் நாசா ஆய்வாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாகச் செவ்வாய்க் கிரகத்தில் அவர்கள் தொடர்ந்து தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அங்கு விரிவான ஆய்வை செய்ய நாசா செவ்வாய் கிரகத்திற்கு இன்ஜெனிட்டி என்ற ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்த இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் முதலில் தனது மிஷனை ஆரம்பித்தது.
இன்ஜெனிட்டி: அதன் பின்னர் அங்கே 50க்கும் மேற்பட்ட பயணங்களை இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே தனது 52ஆவது பயணத்தின் போது, இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் ஓர் இடத்தில் இருந்து கிளம்பிய சில நொடிகளில் அத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நடந்துள்ளது. அதன் பிறகு இன்ஜெனிட்டி ஹெலிகாப்டரில் இருந்து எந்தவொரு சிக்னலும் கிடைக்கவில்லை.
இதனால் நாசா ஆய்வாளர்கள் கவலையடைந்தனர். மீண்டும் இன்ஜெனிட்டி ஹெலிகாப்டரை தொடர்பு கொள்ள அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இருப்பினும், அதில் பெரிதாக எந்தவொரு பயனும் இல்லாமல் இருந்தது. சுமார் 60+ நாட்களாக இதே நிலைதான் தொடர்ந்தது. இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 63 நாட்களுக்குப் பிறகு அதில் இருந்து மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது.
கம்பேக்: அந்த ஹெலிகாப்டரில் இருந்து சிக்னல் வந்த நிலையில், அனைத்து விதமான சோதனைகளும் அதில் மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்தும் சரியாக இருப்பது உறுதியான நிலையில், அந்த ஹெலிகாப்டர் மீண்டும் தனது 52ஆவது பயணத்திற்குத் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கிடைத்துள்ள டேட்டாவை வைத்துப் பார்க்கும் போது, கடந்த ஏப்ரல் மாதம் இன்ஜெனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படங்களை எடுப்பதற்காக ஹெலிகாப்டர் 363 மீட்டர் உயரத்திற்குச் சென்று அங்கே 139 வினாடிகள் இருந்துள்ளது. அப்போது தான் சிக்னல் கட் ஆகியுள்ளது. இதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
ஏன் நடக்கிறது: அதாவது ஆய்வாளர்கள் பூமியில் இருக்கும் நிலையில், அவர்களால் நேரடியாகச் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஹெலிகாப்டரை அங்கே கட்டுப்படுத்த முடியாது. இதனால் இடையில் ரோவர் இருக்கும். இந்த ரோவர் சாதனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்வெளியில் சுற்றி வரும். நாம் இங்கிருந்து அனுப்பும் சிக்னல்கள் ரோவருக்கு தான் முதலில் செல்லும், அதன் பிறகு ரோவரில் இருந்தே அவை ஹெலிகாப்டருக்கு செல்லும்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த ரோவருக்கும் ஹெலிகாப்டருக்கும் இடையே மலை வந்துவிட்டதே சிக்னல் டிராப் ஆகக் காரணமாக இருந்துள்ளது. அதன் பிறகு சுமார் ஆய்வாளர்கள் எடுத்த பலகட்ட நடவடிக்கைக்குப் பின்னரே சிக்னல் இப்போது மீண்டும் கிடைத்துள்ளது.
60 நாட்கள்: செவ்வாய் கிரகத்தில் இதுபோல சிக்னல்கள் கட் ஆகும் என்பது ஆய்வாளர்களுக்கு ஏற்கனவே தெரியும். இருப்பினும், சில நாட்களில் சிக்னல்கள் கிடைத்துவிடும் என்றே நினைத்தார்கள். சுமார் இரண்டு மாதங்களுக்கு சிக்னல் கிடைக்காமல் இருந்த நிலையில், ஹெலிகாப்டரில் அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவே ஆய்வாளர்கள் கருதினர். இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் மீண்டும் அதன் சிக்னல்கள் கிடைத்துள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications