விமானத்திற்குள் புகுந்த "கரடி" கதி கலங்கிய பயணிகள்.. பரபரத்த துபாய் ஸ்டேஷன்.. இப்படியும் நடக்குமா?
வாஷிங்டன்: விமானங்கள் சில நேரங்களில் வானிலை மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக செல்வதை கேள்வி பட்டு இருப்போம். ஆனால், கரடியால் தாமதம் ஆன வினோத சம்பவம் ஈராக்கில் நடைபெற்றுள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
விமானத்தில் சில சமயங்களில் சில விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் இருந்து மங்களூர் செல்ல இருந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றது. அதாவது, கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மங்களூருவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் , தனது பயண நேரமான 2.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 12 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டு சென்றது.

இதனால், 6 பயணிகள் விமானத்தை தவற விட்டனர். அதுபோல நேற்று முன் தினம் ஜெய்பூர் சென்ற விமானம் ஒன்றில் ஏசி செயல்படாமல் போனது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்துகளில் தான் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஏன் ரயில்களில் கூட அவ்வப்போது இதுபோன்ற புகார்களை பயணிகள் முன்வைப்பதுண்டு..
ஆனால், விமானத்தில் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் சற்று விசித்திரமானது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இப்படி என்றால் வெளிநாடுகளில் சில நேரங்களில் விமானங்கள் நடைபெறும் சம்பவம் எல்லாம் இப்படியும் நடக்குமா? என்று எண்ணும் அளவுக்கு அமைந்து விடும்... அதேபோல ஒரு சம்பவம் தான் ஈராக்கில் நடந்துள்ளது. இது குறித்த விவகாரம் வருமாறு:-
உலகில் மிகவும் பிசியான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் துபாய் விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் துபாயில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென்று விமானத்திற்குள் கரடி ஒன்று புகுந்ததது. இதனால், பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
விமானத்தில் சரக்குகள் கையாளும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கரடி தனது கூண்டை உடைத்துக் கொண்டு வெளியேறி பயணிகள் விமானத்திற்குள் புகுந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பயணிகள் விமானத்திற்குள் புகுந்த கரடியை வெளியே கொண்டு வர விமான பணியாளர்கள் முயற்சிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கரடி உள்ளே புகுந்ததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், பயணிகளிடம் விமானி மன்னிப்பு கேட்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கே உரிய பாணியில் கமெண்ட் அடித்து வருகிறார்கள். விலங்குகளை கொண்டு செல்வதற்கான உரிய சர்வதேச விதிகளை பின்பற்றியே கரடியை கொண்டு சென்றதாக ஈராக் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரடியை கொண்டு செல்ல இருந்த நபரின் விவரத்தையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து எதையும் கூற துபாய் விமான நிலையம் மறுத்துவிட்டது. விமானம் கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றதாக பயணிகள் சிலர் ஆதங்கத்துடன் கூறினர். விமானத்தில் நடந்த வினோத சம்பம் தொடர்பாக விசாரணைக்கு ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications