சைலண்டாக சீனா கொடுத்த அடி.. அப்படியே ஆஃப் ஆன அதிபர் டிரம்ப்.. ஒட்டுமொத்த அமெரிக்காவும் அலறிடுச்சே
வாஷிங்டன்: உலகின் மற்ற நாடுகளை வரிகளைக் காட்டி பயமுறுத்தும் டிரம்ப், சீனாவிடம் மட்டும் பதுங்கியே வருகிறார். இதற்கு ரேர் எர்த் மெடல் மட்டுமே காரணம் என நீங்கள் நினைத்தால் அது பெரிய தவறு. சீனா வசம் இன்னொரு பெரிய ஆயுதம் இருக்கிறது. அதை வைத்தே டிரம்பிற்கு சீனா பிரஷர் கொடுத்திருக்கிறது.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளார். சீனப் பொருட்களுக்கு டிரம்ப் முன்பு 145% வரி விதித்திருந்தார். இந்த வரிகளை 3 மாதங்கள் நிறுத்தி வைக்க டிரம்ப் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். அந்தக் காலக்கெடு நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மீண்டும் இதை 3 மாதங்கள் நீடித்துள்ளார்.

காரணம் என்ன
உலக நாடுகளை மிரட்டும் டிரம்ப் சீனாவிடம் மட்டும் அமைதியாகப் போகக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்கு 145% வரியை அமெரிக்கா அறிவித்தபோது அதற்குச் சீனா தக்கப் பதிலடி கொடுத்தது. அமெரிக்க ஏற்றுமதிக்கு 125% வரி விதித்தது மட்டுமின்றி, ரேர் எர்த் மெடல்ஸ் எனப்படும் அரிய உலோகங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த வலியை அமெரிக்கா உடனடியாக உணர்ந்தது. அமெரிக்காவின் வாகனத்துறை, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் செமி கண்டக்டர் என அனைத்துத் துறைகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி டிரம்ப்பை வழிக்குக் கொண்டு வர விவசாயப் பொருட்களையும் கூட சீனா ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கும் சீனா கட்டுப்பாடு விதித்தது. இதனால் அமெரிக்க விவசாயப் பொருட்கள் சீனாவுக்குள் வருவது கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்தது.
விவசாயப் பொருட்கள்
கடந்தாண்டு ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் $13.1 பில்லியனாக இருந்த இதன் மதிப்பு இந்தாண்டு ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் $6.4 பில்லியனாகக் குறைந்துள்ளது. குறிப்பாக சோயாபீன் இறக்குமதியைச் சீனா வெகுவாகக் குறைத்தது. கடந்த 2022ல் 17.9 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க சோயபீன்கள் சீனாவுக்குச் சென்றது. ஆனால், இந்தாண்டு அது $2.5 பில்லியனாக குறைந்துள்ளது. இது அமெரிக்காவுக்கும் அமெரிக்க விவசாயிகளுக்கும் நல்லதில்லை. இதன் காரணமாகவே சோயாபீன் இறக்குமதியை அதிகரிக்க சீனா உதவ வேண்டும் என நேரடியாகவே டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சோயாபீன் மட்டுமின்றி சீனா மக்காச்சோளம், சோளம் மற்றும் பார்லி, பருத்தி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் என அனைத்தையும் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்தது.
திணறிய அமெரிக்கா
இதன் மூலம் சீனா வைத்த செக் காரணமாக அமெரிக்காவுக்கு பிரஷர் அதிகரித்தது. படுத்திவிட்டது. இதனால் அமெரிக்காவின் ஓஹியோ, இண்டியானா உள்ளிட்ட பல மாகாண விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். அதேபோல அமெரிக்க இறைச்சி ஏற்றுமதியும் குறைந்ததால் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவில் உள்ள மாட்டிறைச்சி விற்பனையாகலும் பாதிக்கப்பட்டன. இப்படிச் சீனாவின் இந்த மறைமுக அடியால் அமெரிக்கா திணறியது.
சீனாவின் பிளான்
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சீனாவுக்கு ரேர் எர்த் மெடலில் மட்டும் கட்டுப்பாடு இல்லை.. உலகின் மிகப் பெரிய விவசாயப் பொருட்கள் இறக்குமதியாளர்களில் ஒருவராகவும் இருப்பதால் அதை வைத்தும் அமெரிக்காவுக்கு செக் வைத்துள்ளது. இதன் காரணாமகவே சீனா பற்றி வாயே திறக்காமல் இருக்கும் டிரம்ப் வரி ஒப்பந்தத்தை நீடிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசமும் வழங்கியிருக்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications