Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செல்வந்தர்களிடையே அதிகாரம் குவிகிறது.. இது அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்!" அதிபர் பைடன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு சில கோடீஸவரர்களிடையே ஆபத்தான அளவுக்கு அதிகாரம் குவிந்து வருவதாக எச்சரித்துள்ள பைடன், சுயநலவாதிகள், தவறான தகவல்கள் மற்றும் ஏஐ ஆகியவை மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்றும் இதில் இருந்து அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போகும் பைடன், நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் அமெரிக்கா எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் செல்வந்தர்களிடையே அதிகாரம் குவிவது குறித்தும் எச்சரித்தார்.

biden america

பைடன்:

தனது ஓவல் அலுவலகத்தில் இருந்து உரையாற்றிய பைடன் பல முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டார். கொரோனா தொற்றால் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்ட சூழலில், அதில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டு மிகச் சிறப்பாக வழிநடத்தியிருப்பதாக பைடன் குறிப்பிட்டார். மேலும், இந்த காலகட்டத்தில் பல முக்கிய நட்பு நாடுகளுடன் உடனான உறவுகள் மேம்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எலான் மஸ்க் உள்ளிட்ட கோடீஸ்வரர்களுடன் அடுத்துப் பதவியேற்கவுள்ள டிரம்ப் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் சூழலில், அதையும் பைடன் மறைமுகமாகச் சாடினார். அமெரிக்காவில் சுயநலன்களுக்கு முக்கியத்துவம் தரும் குழு உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பிட்ட சிலரிடம் ஓவராக அதிகாரம் குவிந்து வருவதாகவும் எச்சரித்தார்.

அதிகாரம் குவிகிறது:

இது தொடர்பாக அவர் பேசுகையில், "இன்று, அமெரிக்காவில் அதீத செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு குழு வடிவம் பெற்று வருகிறது. இது நமது நாட்டின ஜனநாயகத்தையும், அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் அச்சுறுத்துகிறது. அனைவருக்கும் முன்னேற ஒரு நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அதை இந்த குழு தடுக்கும் ஆபத்து இருக்கிறது.

அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் அடிப்படை சிந்தனை.. கடின உழைப்பு மற்றும் உங்கள் திறமைகளும் உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அந்த அடிப்படையை நம்மால் இழக்க முடியாது. ஆனால், அதற்கு இப்போது ஆபத்து உருவாகியுள்ளது" என்றார்.

டெக் துறை:

1961ம் ஆண்டு அப்போதைய அதிபர் டுவைட் ஐசனோவர் அதிபராக ஆற்றிய கடைசி உரையில் கட்டுப்பாட்டை மீறிய ராணுவ-தொழில்துறை வளர்ச்சி குறித்து எச்சரித்திருந்தார். அதை நினைவு கூர்ந்த பைடன், "டெக் துறையும் கூட கிட்டதட்ட அதேபோன்ற ஒரு அசாத்திய கட்டுப்பாட்டை மீறிய வளர்ச்சி அடையுமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது.

அமெரிக்கர்கள் தவறான தகவல்களுக்கு அடிபணிந்து, அதை உண்மை என நம்பி வருகிறார்கள். சிலர் இதை வைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். பத்திரிகை சுதந்திரம் மோசமடைந்து வருகிறது. மேலும், அமெரிக்க ஊடகங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சுதந்திரமான பத்திரிகை சிதைந்து வருகிறது. செய்தியாளர்கள் காணாமல் போய் வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்கள்:

சமூக வலைத்தளங்கள் பேக்ட் செக் செய்ய வேண்டும். ஆனால், அதை அவர்கள் கைவிடுகின்றன.. அதிகாரம் மற்றும் லாபத்திற்காகச் சொல்லப்படும் பொய்களால் உண்மை நசுக்கப்படுகிறது. நமது குழந்தைகள், நமது குடும்பங்கள் மற்றும் நமது ஜனநாயகத்தைத் துஷ்பிரயோக சக்தியிலிருந்து பாதுகாக்க சமூக வலைத்தளங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க நாம் பல்வேறு சரியான நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனால், சிலர் தங்கள் லாபத்திற்காக இதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதிகாரம் மற்றும் லாபத்திற்காக தங்கள் சொந்த நலனுக்கு இவர்கள் எடுக்கும் முடிவு பேராபத்தை விளைவிக்கும்" என்றார்.

ஏஐ தொழில்நுட்பம்:

தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரித்த பைடன், "நமது இந்த காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் மிகப் பெரிய விஷயமாக மாறியுள்ளது. இது மிகப்பெரிய நன்மைகளைத் தரும். ஆனால், அதேநேரம் நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கும் கூட இது ஆபத்தை ஏற்படுத்தலாம்" என்றார்.

மேலும், தனது நிர்வாகத்தின் எட்டு மாத இடைவிடாத பேச்சுவார்த்தையின் காரணமாகவே இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+