மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து இணை இயக்குநர் பில்கேட்ஸ் விலகல்
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து இணை இயக்குநர் பில்கேட்ஸ் விலகியுள்ளார்.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இயக்குநர் குழுவிலிருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளார் என்றும் அவர் சத்யா நாதெள்ளாவுக்கு தொழில்நுட் ஆலோசகராகவும் பங்களிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் செலவிடுவதற்காகவே இயக்குநர் குழுவிலிருந்து அவர் விலகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பில்கேட்ஸுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி, பெருமிதம் அளிக்கிறது என நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
1975ஆம் ஆண்டு தனது நண்பர் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை நிறுவினார். இதையடுத்து 2000-ஆம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
2014-ஆம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு வந்த சத்யா நாதெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக தனது சேவையை கேட்ஸ் தொடர்ந்தார். தற்போது இயக்குநர் குழுவிலிருந்து விலகியுள்ளார்.












Click it and Unblock the Notifications