Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபரீத ஆசை! பாலியல் சுகத்திற்காக 11 ரிங்க் மாட்டிய நபர்.. வீங்கிய அந்தரங்க உறுப்பு.. ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாலியல் சுகத்திற்காக அந்தரங்க உறுப்பில் 11 ரிங்குகளை மாட்டிய நபர்.. அதை எடுக்க முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் சுயநினவை இழந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருக்கிறார். தாய்லாந்தில் நடந்த இந்த வினோத சம்பவம் குறித்து இங்கே பார்க்கலாம்.

தாய்லாந்தில் பாலியல் சுகத்திற்காக அந்தரங்க உறுப்பில் 11 ரிங்குகளை மாட்டிய நபர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் பாலியல் சுகம் அதிகம் பெறுவதற்காக அந்தரங்க உறுப்பில் ரிங் மாட்ட வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்.

Bizzare incident man in Thailand Rushed to hospital after attempting to put 11 Rings in his private parts

இந்த விபரீத எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக அருகில் உள்ள ஹார்டுவேர் கடைக்கு சென்ற அந்த நபர் அங்கு கிட்டத்தட்ட ஒரு டஜன் ரிங்குகளை வாங்கியிருக்கிறார். பின்னர் தனது அந்தரங்க உறுப்பில் மாட்டியிருக்கிறார். ஆனால், இந்த ரிங்குகளை அவரால் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தரங்க உறுப்பு வீக்கம்: எவ்வளவோ முயற்சித்தும் ரிங்குகளை கழற்ற முடியாமல் அவதிப்பட்ட அந்த நபர், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளர். நேரம் செல்ல செல்ல அந்தரங்க உறுப்பு வீக்கம் அடைந்துள்ளது. இதனால், அவரது உடல் நலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டாக்டர்கள் அதிர்ச்சி: பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபரை பரிசோதித்த நபர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு அந்த நபரின் அந்தரங்க உறுப்பில் இருந்த ரிங்குகளை எடுக்க முடியாமல் போராடியுள்ளார். மெட்டலில் இருந்த ரிங்க் என்பதால் பல மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு அந்த ரிங்கை கட் செய்து அகற்றினர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு தாய்லாந்து நபரின் உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டது.

சுகத்தை அதிகமாக பெறுவதற்காக: இதையடுத்து, தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அந்த நபர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், அந்த நபரின் நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரியமுடியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அந்த நபர் மருத்துவர்களிடம் கூறுகையில், "பாலியல் சுகத்தை அதிகமாக பெறுவதற்காக வீட்டில் வைத்து யாருக்கும் தெரியாமல் ரிங்குகளை வாங்கி அந்தரங்க உறுப்பில் மாட்டினேன்.

பின்னர் தான் தவறை உணர்ந்தேன்: ஆனால், மெட்டல் உலோகம் என்பதால் அதிக வலியை கொடுத்ததோடு மீண்டும் அதை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகே தவறை உணர்ந்தேன்" என்றார். இந்த வினோத சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், அந்தரங்க உறுப்பில் இதுபோன்ற ரிங்குகளை மாட்டுவது மிகவும் ஆபத்தானது. அந்தரங்க உறுப்பில் பல பிரச்சினைகளை இது ஏற்படுத்திவிடும். காயங்கள் மட்டும் இன்றி சில டிஸாடர்களும் ஏற்பட வாய்புள்ளது.

அகற்ற வேண்டிய சூழல் கூட எற்படலாம்: நிரந்தர பிரச்சினையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்தரங்க உறுப்பை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழல் கூட எற்படலாம்" என்றனர். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போய்விட்டது என்ற கதையாக தற்போது தாய்லாந்து நபர் தனது செயலை எண்ணி வருத்தப்பட்டாலும் நல்ல வேளையாக தப்பித்துக்கொண்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+