தேர்தலில் தோற்றாலே அவ்வளவுதான் போலயே! பிரேசில் Ex அதிபருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி! அட பாவமே

அமெரிக்காவில் ஜெய்ர் போல்சனாரோ தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்தாண்டு வரை ஒட்டுமொத்த பிரேசில் நாட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெய்ர் போல்சனாரோ இப்போது மிகவும் தனிமையில் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதிகள் என்றவுடன் நாம் அனைவருக்கும் பகட்டான வாழ்க்கை முறையே நினைவில் வரும். எங்குச் சென்றாலும் சொகுசு கார், பாதுகாப்பு அதிகாரிகள் என்று பக்காவாகவே அவர்கள் வலம் வருவார்கள்.

ஆனால், இது எல்லாம் அரசியல்வாதிகள் தேர்தலில் வெல்லும் வரை தான்.. தேர்தலில் தோற்றால் நிலைமை அப்படியே மாறிவிடும். கீழே விழுந்தால் கூட தூக்கிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.

 ஜெய்ர் போல்சனாரோ

ஜெய்ர் போல்சனாரோ

அப்படியொரு சம்பவம் தான் பிரேசில் அதிபருக்கு நடந்துள்ளது.. லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசில் அதிபராக இருந்தவர் ஜெய்ர் போல்சனாரோ.. அங்கிருந்த முக்கிய வலதுசாரி தலைவராக இருந்த ஜெய்ர் போல்சனாரோ, 2019இல் தொடங்கி 2022 வரை பிரேசில் நாட்டிற்கு அதிபராக இருந்தார். கடந்தாண்டு அங்கு நடந்த அதிபர் தேர்தலில் இவர் தோல்வியடைந்தார். தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஜெய்ர் போல்சனாரோ ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தன. இருப்பினும், அதற்கு முன்பே அவர் பிரேசில் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

 அமெரிக்காவில் தஞ்சம்

அமெரிக்காவில் தஞ்சம்

உடல்நிலை பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற ஜெய்ர் போல்சனாரோ அமெரிக்கா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.. இருப்பினும், பிரேசில் நாட்டில் அவருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ள நிலையில், அந்த விசாரணையில் இருந்த தப்பவே ஜெய்ர் போல்சனாரோ அமெரிக்கா சென்றுள்ளதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதற்கிடையே பிரேசில் நாட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெய்ர் போல்சனாரோவின் அமெரிக்காவில் எப்படி வாழ்ந்து வருகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தனிமையில் முன்னாள் அதிபர்

தனிமையில் முன்னாள் அதிபர்

ஆடம்பரமான அதிபர் மாளிகை, சொகுசு கார் என்று படுஜோராக வாழ்ந்த போல்சனாரோ.. இப்போது அமெரிக்காவில் பிளோரிடாவில் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டுக்கு அருகில் சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.. அதுவும் கூட பிரேசில் முன்னாள் தற்காப்புக் கலை சாம்பியன் ஜோஸ் ஆல்டோவின் ஆர்லாண்டோ வீட்டில் தான் இவர் தங்கியுள்ளாராம்.. அவர் அமெரிக்கா வந்து 1.5 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் பெரியளவில் எங்கும் அவர் வெளியே செல்வதில்லை.. மேலும், வீடுகளுக்குத் தேவையான மளிகை பொருட்களை இவரே சூப்பர் மார்கெட்டிற்கு சென்று வாங்குகிறார்.

 பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லை

பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லை

மேலும் கேஎஃப்சி உணவகங்களில் தனியாக அமர்ந்து சிக்கனை சாப்பிடுகிறார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த மெக்சிகோ நாட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர், பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தனியாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தோற்றாலே அரசியல்வாதிகளுக்கு மதிப்பு இல்லை போலவே என்று நெட்டிசன்கள் பலரும் போல்சனாரோ குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.

 எதிர்காலம் என்ன

எதிர்காலம் என்ன

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் போல்சனாரோ அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் ஜன. இறுதியில் பிரேசில் திரும்ப விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அங்கு நிலவும் சூழலை வைத்துப் பார்த்தால்.. அவரால் இப்போதைக்கு அங்குச் செல்ல முடியாது.. இதற்கிடையே சில நாட்களுக்கு முன், போல்சனாரோ அமெரிக்காவில் மேலும் ஆறு மாதங்கள் தங்க புதிய விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் நீண்ட காலம் அமெரிக்காவிலேயே தங்கத் திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

 விருப்பம்

விருப்பம்

முன்னாள் அதிபர் போல்சனாரோ இப்போதைக்குப் பிரேசில் திரும்ப மாட்டார் என்றே அவரது மகன் ஃபிளாவியோ போல்சனாரோ தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நாளை திரும்பி வரலாம்.. அல்லது ஆறு மாதங்கள் ஆகலாம்.. அவ்வளவு ஏன் திரும்பி வராமலேயே கூடப் போகலாம்" என்று மழுப்பலாகவே பேசியிருந்தார். இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய சிறிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போல்சனாரோ, தனக்கு பிரேசில் அரசியல்வாதியாக இருப்பதே விருப்பம் என்றும் பிரேசிலிய அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+