இனி தங்கம்தான் ராஜா.. அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த BRICS! தடாலடியாக சரிந்த டாலர்!
வாஷிங்டன்: உலகின் மிகவும் சக்திவாய்ந்த கரன்சியாக இருக்கும், அமெரிக்காவின் டாலரை பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது என்று, 'ரிச் டேட் புவர் டேட்' புத்தகத்தின் ஆசிரியரும் பிரபல நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி எச்சரித்துள்ளார். எனவே எதிர்காலங்களில் தங்கத்தில் அதிக முதலீடுகளை நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பானது, தங்களுக்குள் பரிவர்த்தனையை தங்கள் உள்ளூர் கரன்சியில் மேற்கொண்டிருக்கின்றன.

முதல் உதாரணம்
இப்படி நடப்பது முதல் முறை கிடையாது. அமெரிக்கா டாலருக்கு மாற்றாக, ஐரோப்பாவின் கரன்சியான யூரோவை பயன்படுத்த ஈராக்கின் சதாம் உசேன் முயன்றார். கச்சா எண்ணெய்யை யூரோவில் விற்கப்பபோவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்புக்கு எதிராக ஈராக் மீது 3 ஆண்டுகளாக அமெரிக்கா போரை நடத்தியது. இந்தப் போர், டாலரின் மதிப்பை தக்க வைத்துக்கொள்ள அமெரிக்கா கடந்த காலங்களில் ராணுவத்தை பயன்படுத்தியதற்கு உதாரணம்.
இரண்டாவது உதாரணம்
இரண்டாவது உதாரணம், லிபியாவில் கடாபி தங்கம் சார்ந்த ஆப்பிரிக்கன் ஆணையத்தை கொண்டுவர முயன்றபோது நடந்தது. தங்கம் சார்ந்த கரன்சியை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால், எங்கள் நாட்டின் எண்ணெய் வளங்களை நாங்கள் அதில்தான் விற்பனை செய்வோம் என்று கடாபி ஒற்றை காலில் நின்றார். எனவே 2011ல் நேட்டோ தலையிட்டு, கடாபி கொல்லப்பட்டார். லிபிய எண்ணெய் விற்பனை மீண்டும் டாலருக்கு மாறியது.
பிரிக்ஸ் நாடுகள்
ஆனால், தற்போது சீனா மற்றும் ரஷ்யா போன்ற பிரிக்ஸ் நாடுகள், டாலர் சாராத உள்கட்டமைப்பை உருவாக்கிவிட்டன. இனி இந்த நாடுகளுக்குள் நுழைந்து, அமெரிக்கா ராணுவம் தனது டாலர் வர்த்தகத்தை நிலை நிறுத்த போர் செய்ய முடியாது.
ரஷ்யா-சீனா இடையே 90 சதவீதமான வர்த்தகம் அந்த நாடுகளின் உள்ளூர் கரன்சி மூலம் நடக்கிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு வர்த்தகம் 50 சதவீதம் அளவுக்கு உள்ளூர் நாணயங்களிலேயே நடக்கிறது. எதை அமெரிக்காவில் தடுக்க முடியவில்லை.
அமெரிக்காவின் தோல்வி
உலக நாடுகள் இந்த மாற்றத்தை உன்னிப்பாக கவனிக்கின்றன. அதிக அளவில் அமெரிக்க டாலர்களை வைத்திருந்த சீனாவும் ரஷ்யாவும் இப்பொழுது டாலர்களை வேகமாக விற்று வருகிறது. எனவே டாலர் மீதான மதிப்பு சரிவடைந்து, தங்கத்தின் மீதான மதிப்பு அதிகரித்திருக்கிறது. டாலருக்கு பதில் உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் 800 டன்னுக்கும் அதிகமாக தங்கம் உள்ளது. மொத்த பிரிக்ஸ் நாடுகளை கணக்கில் கொண்டால் 6,000 டன்களுக்கும் அதிகமாக இந்த நாடுகள் தங்கத்தை வைத்திருக்கின்றன.
இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு டாலர் குறியீடு 9.4 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு.
தங்கம்தான் ராஜா!
வெளிநாடுகளில் உள்ள டாலர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் திரும்பும் போது, பணப்புழக்கம் அதிகரித்து, மக்களின் வாங்கும் திறன் குறையும். ஒரு காலத்தில் உலகை ஆட்சி செய்த பிரிட்டிஷ் கரன்சியான பவுண்டு, தனது மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக எழுந்தது போல.. டாலரும் விழுந்து கொண்டிருக்கும் நாணயமாக மாறும்" என்று எச்சரித்து இருக்கிறார். எனவே முதலீடு செய்பவர்கள் டாலராக பணத்தை சேமிக்காமல் தங்கம் மற்றும் பிற சொத்துக்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் என்றும் கூறுகிறார்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications