அத்துமீறும் டிரம்ப்.. அதிரடிக்கு ரெடியாகும் கலிபோர்னியா! நீதிமன்றத்தின் மூலம் செக் வைக்க திட்டம்!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ய, டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் வன்முறையில் முடிந்திருக்கின்றன. போராட்டங்களை கட்டுப்படுத்த தேசிய பாதுகாப்புப்படையினரை டிரம்ப் குவித்திருக்கிறார். இந்த உத்தரவுக்கு எதிராக கலிபோர்னியா அதிகாரிகள் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 1.8 கோடி மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அமெரிக்காவுக்குள் நுழைய கடுமையான விசா கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மட்டுமல்லாது நிறைய பணமும் செலவாகும். இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணரும் லத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள், சட்டவிரோதமாக எல்லையை தாண்டி அமெரிக்காவுக்குள் வருகின்றனர். இவர்கள் மிகவும் அடிப்படையான வேலைகளை செய்கின்றனர். தூய்மை பணி, ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள், லாரி டிரைவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், சமையல் கலைஞர்கள் என எந்த வேலை கிடைத்தாலும் அதை செய்கின்றனர்.
அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஆனால், டிரம்ப் அதிபராக வந்த பிறகு, சட்டவிரோத குடியேறிகள் அரசியலுக்காக குறிவைக்கப்படுகின்றனர். இவர்களை ஏலியன்கள் என்கிற ரேஞ்சுக்கு டிரம்ப் சித்தரித்துள்ளார். மட்டுமல்லாது இவர்களை கைது செய்ய டார்கெட்டையும் பிக்ஸ் செய்திருக்கிறார். ஓராண்டுக்குள் இவ்வளவு பேரை கைது செய்ய வேண்டும் என்று, காவல்துறையினருக்கு உத்தரவும் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 44 பேர், சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், இதர சட்டவிரோத குடியேறிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் காவல்துறையினரின் தலையீட்டுக்கு பிறகு வன்முறையாக மாறியிருக்கிறது.
இன்று அதிபராக இருக்கும் டிரம்ப் உட்பட, பல வெள்ளையர்கள், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிவர்கள்தான். அவர்களே குடியேறிகளாக இருக்கும்போது நாங்கள் வந்தால் என்ன தப்பு? என்று போராட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் போராட்டக்காரர்களை அடக்க தேசிய பாதுகாப்பு படையின் உதவியை டிரம்ப் நாடியுள்ளார். ஆயுதம் தாங்கிய இவர்கள், போராட்டக்காரர்களை சுடுவதற்கு கூட தயங்க மாட்டார்கள். இப்படி இருக்கையில், இதற்கு கலிபோர்னியா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
மாகாணத்தின் ஆளுநரைக் கலந்தாலோசிக்காமல், பாதுகாப்பு படையை உள்ளே கொண்டுவருவதும், அவர்களை கொண்டு போராட்டங்களை ஒடுக்குவதும் இறையாண்மைக்கு எதிரானது என்று ஆளுநர் நியூசம் கூறியிருந்தார். மட்டுமல்லாது இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தடை உத்தரவை பெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல விஷயங்களில் நீதிமன்ற உத்தரவுகள், டிரம்ப்பை காய வைத்திருக்கின்றன. இப்படி இருக்கையில் கலிபோர்னியா அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடி, டிரம்பின் முயற்சிக்கு எதிராக தடை உத்தரவை பெற்றால், அவரை கடுப்பேற்றும் என்பது உண்மை.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications