கருணை காட்டாத காட்டு தீ! லாஸ் ஏஞ்சல்ஸில் எங்கு பார்த்தாலும் சாம்பல்! நெஞ்சை பதற வைக்கும் பலி எண்ணிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ இந்தாண்டின் கோர சம்பவங்களை மிக மோசமாகப் பதிவாகியுள்ளது. இரக்கம் காட்டாத இயற்கையின் காட்டு தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நெஞ்சை பதற வைக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டு தீ இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரிடராக பதிவாகி இருக்கிறது. புதிய அதிபரை வரவேற்க காத்திருக்கும் அமெரிக்கா தற்போது இந்த விவகாரம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஏழாம் தேதி ஏற்பட்ட காட்டு தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத நிலையில் திடீரென பற்றிய காட்டு தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க அமெரிக்கா கடுமையாக போராடி வருகிறது.
காலிபோர்னியா மாகாணத்தை சுற்றிலும் இருந்த மாகாணங்களில் இருந்து 1400 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட விமானங்கள், 14,000 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காற்று காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் கடுமையாக பாதித்துள்ளது.

வரும் புதன்கிழமை வரை காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தை தாண்டி வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மலைப் பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நாளை காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே காட்டுத்தீயை அதற்குள்ளாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே நகரம் முழுவதும் சாம்பல் மேடாக காட்சியளிக்கும் நிலையில் உயிரிழந்தோர் உடல்களை மீட்க மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது பாலிசெட் பகுதியில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கிருக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாலிசெட், கென்னட், ஹார்ஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் 62 சதுர மைல் பரப்பளவுக்கு காட்டுத் தீயால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 16 பேரை காணவில்லை என்கின்றனர் அதிகாரிகள். இதை அடுத்து அவர்களை தேடும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications